Latest News

June 10, 2013

கோவிலை இடித்து அகற்று கோத்தா உத்தரவு
by admin - 0

இலங்கையின் தலைநகர் கொழும்பில் 80 வருடகாலமாக இருந்து வந்த
இந்து ஆலயத்தினை இடமாற்றுமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். கொள்ளுப்பிட்டி தர்மாலோக மாவத்தையின் முடிவில், அலரி மாளிகைக்குப் பின்புறமாக
சிறி பூமாரி அம்மன் ஆலயத்தை மாற்றுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் குறித்த வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1920களில் இந்தப் பகுதியில், கொழும்பு மாநகரசபையினால்,
கொள்ளுப்பிட்டி தர்மகிட்யராமய விகாரைக்குப் பின்பாக, குடியமர்த்தப்பட்ட சலவைத் தொழிலாளர் சமூகத்தினரின் வழிப்பாட்டுக்காக 1930களில், இந்தக் கோவில் அமைக்கப்பட்டது. மூன்று தல விருட்சங்களைக் கொண்டு 80 ஆண்டுகளாக இயங்கும் இந்தக் கோவில்
கொள்ளுப்பிட்டிப் பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. கோத்தாபய ராஜபக்சவின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள நகர
அபிவிருத்தி அதிகாரசபையே இதற்கான உத்தரவை வழங்கியுள்ளது. இந்தக் கோவில் அமைந்துள்ள இடத்தில் கொழும்பு மாநகரசபை வாகனத் தரிப்பிடம்
அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது.
« PREV
NEXT »

No comments