Latest News

June 13, 2013

13வது அரசியல் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்தோ திருத்தங்களை ஏற்படுத்தினாலோ நீதிமன்றம் செல்வோம்: அசாத் சாலி
by admin - 0

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யவோ, அதில்
திருத்தங்களை ஏற்படுத்தவோ அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக
நீதிமன்றத்திற்கு செல்ல போவதாக தமிழ் முஸ்லிம் முன்னணியின் தலைவர் அசாத்
சாலி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன கொண்டு வந்த இந்த 13 வது அரசியல் அமைப்புத்
திருத்திற்கு அதனை தாண்டிய மேலும் அதிகாரங்களை வழங்குவதாக ஜனாபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.  கடந்த 25 வருடங்களாக 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ்
08 மாகாண சபைகள் இயங்கி வருகின்றன.  வடக்கு மாகாணத்திற்கு மாத்திரம் ஏன் கூடாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எவ்வாறாயினும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்து செய்வதையும், அதில் திருத்தங்களை ஏற்படுத்துவதையும் அரசாங்கத்தில் உள்ள சுமார் 20 அமைச்சர்கள் எதிர்த்துள்ளனர்.
இதனை தாம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும்
போது, தானும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு பயங்கரவாதிகளாக தெரிவதாகவும் அசாத் சாலி மேலும் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments