Latest News

May 07, 2013

ஈழத்தமிழர்களிடம் அந்தந்த நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தி சுதந்திர ஈழம் அமையும்-வை.கோ.
by admin - 0

உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்களிடம் அந்தந்த நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தி சுதந்திர ஈழம் அமையும் நாடு ஈழ நாடு மட்டுமாகத் தான் இருக்கும். அந்த வாக்கெடுப்பில் 99.9 சதவீதம் வெற்றி பெறும். அதேபோல ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 99.9 சதவீதம் மக்கள் வாக்களிப்பார்கள். இவ்வாறு உணர்ச்சிகரமாக பேசினார் வை.கோ. ம.தி.மு.க தொடங்கி 19 ஆண்டுகள் நிறைவடைந்து 20ம் ஆண்டில்
அடியெடுத்து வைக்கிறது. 20ம்
ஆண்டு தொடக்கவிழா பொதுக் கூட்டம்
புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில்
நடந்தது. இரவு 8.45 க்கு தொடங்கி 10.45 மணி வரை 2 மணி நேரம் ம.தி.மு.க
பொது செயலாளர் வைகோ பேசினார். மத்தியில் 10 ஆண்டுகாலம் கொடிய
துரோக காங்கிரஸ் ஆட்சி நடந்துவிட்டது.
இனியும் அந்த ஆட்சி தொடரக் கூடாது. ஈழத்திற்கு அவர்கள் செய்த
துரோகத்திற்கு காங்கிரஸ்காரனுக்கு மன்னிப்பே கிடையாது.
தனி கட்சி ஆட்சி என்பது சாத்தியமில்லை. இலங்கையில் தமிழர்களைக் கொல்ல
திருவனந்தபுரம் வழியாக விமானத்தில் ஆயுதம் போனது. அதை தடுத்து நிறுத்தாமல் அந்த விமானத்திற்கு எரிபொருள் நிரப்பி இலங்கைக்கு அனுப்பியவர் ராஜிவ்காந்தி. அவரிடம் இதுபற்றி கேள்வி கேட்டேன். ஆயுதம்
அனுப்பவில்லை வெடிமருந்துகள் தான்
போகிறது என்றார். அந்த வெடி மருந்துகள்
தான் நம் தமிழினம் அழிய காரணமாக இருந்தது. அதே நேரத்தில் கடல் புறா என்ற படகில் 17 கரும்புலிகள் ஆயுதம் இன்றி செல்லும் போது சுற்றி வளைத்து பிடித்தார்கள். அவர்களை சுட்டுக் கொல்ல சொன்னார்கள். அதில் 12 புலிகள் நஞ்சை கடித்தார்கள். 5 புலிகள் எஞ்சினார்கள். காயமடைந்த 37  விடுதலைப்
புலி உறுப்பினர்களுக்கு ஓராண்டு என்
வீட்டில் வைத்து உணவு கொடுத்தேன். என்
அம்மா அவர்களை பார்த்துக் கொண்டார். அதனால் ஓராண்டு சிறை தண்டனை கொடுத்தார்கள். இதை மனப்பூர்வமாக ஏற்றக் கொண்டேன். பாராளுமன்ற கட்டிட சுவற்றில் ராஜராஜசோழன் புலி கொடி பறக்க ஈழம் கொண்ட ஓவியம் வரையப்பட்டிருந்தது.
பாராளுமன்றத்தில் பேசும்
போது சுவரோவியத்தைப்
பற்றி குறிப்பிட்டு பேசினேன். அதனால் அந்த ஓவியம் அழிக்கப்பட்டது. அதன்
பிறகு இன்று வரை அந்த ஓவியம்
வரையப்படவில்லை. சிவக்கொழுந்தம்மாளுக்கு 4 பிள்ளைகள்
அவர்கள் 4 பேரும் களத்திற்கு போனார்கள்.
களம் வெற்றி கண்டது. 4 பிள்ளைகளும்
செத்தார்கள். செத்ததை பற்றி கவலைப்படவில்லை அந்த
அம்மாள் களம் வெற்றி கண்டதே என்று பெருமிதப்பட்டார். அவர்
தான் புலிகளின் அம்மாள். அதே போல
ஜோதிமணியம்மாள் தன்
பிள்ளைகளை காணவில்லை என்று அவர்களின் கல்லறையில் இருந்து எடுக்கப்பட்ட இரு கற்களை வைத்து முகாமில் தகர கொட்டகையில் பூஜை செய்தார். உலகத்தில் வாக்கெடுப்புகள் மூலம் பல நாடுகள் சுதந்திரம் பெற்றுள்ளது. ஆனால்உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும்
ஈழத்தமிழர்களிடம் அந்தந்த நாடுகளில்
வாக்கெடுப்பு நடத்தி சுதந்திர ஈழம் அமையும் நாடு ஈழ நாடு மட்டுமாகத் தான் இருக்கும். அந்த வாக்கெடுப்பில் 99.9 சதவீதம் வெற்றி பெறும். அதேபோல ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று 99.9 சதவீதம் மக்கள்
வாக்களிப்பார்கள். இவ்வாறு உணர்ச்சிமிக்க
பேசினார் வை.கோ.
« PREV
NEXT »

No comments