
ஊர்வீதி மில்லத் மகளிர் மஹா வித்தியாலயத்திற்கு முன்னாலுள்ள வீதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த புத்திசுவாதீனமுற்ற மகன் தனது தாயை வீட்டில் வைத்து கடுமையாக தாக்கியும் அடித்தும் உள்ளதால் படுகாயமடைந்த தாயை வீட்டிற்கு அருகிலுள்ள அயலவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு; செல்லும்போதே வழியில் உயிரிழந்துள்ளார்.
54 வயதுடைய றஹ்மத்தும்மா என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார். தாயை அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் தற்போது பொலிஸில் சரணடைந்துள்ளார்.
தாயின் சடலம் தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
No comments
Post a Comment