Latest News

May 07, 2013

காமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டிஷ் அரசி எலிசபத் கலந்துகொள்ளமாட்டார்.
by admin - 0

இலங்கையில் வரும் நவம்பரில் நடக்க இருக்கும்
காமன்வெல்த் உச்சிமாநாட்டில் பிரிட்டிஷ்
அரசி எலிசபத் கலந்துகொள்ள மாட்டார்.
இது குறித்த அறிவிப்பொன்று பக்கிங்காம்
அரண்மனையிலிருந்து வெளியாகியிருக்கிறது. 54 நாடுகள் உறுப்பினர்களாகக் கொண்ட
காமன்வெல்த் அமைப்பின்
இரண்டு வருடத்துக்கு ஒரு முறை நடக்கும்
கூட்டங்களை 1971லிருந்து ஒரே ஒரு முறைதான்
அரசி எலிசபத் கலந்துகொள்ளாமல்
தவறவிட்டிருக்கிறார். பிரிட்டிஷ் அரசிதான் காமன்வெல்த் அமைப்பின்
தலைவி என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் அரசிக்குப் பதிலாக அவரது வாரிசான, இளவரசர் சார்லஸ் , இந்த
மாநாட்டில் கலந்து கொள்வார். 87 வயதாகும் பிரிட்டிஷ் அரசிக்கு, இத்தகைய நீண்டதூர விமானப் பயணங்கள்
ஏற்படுத்தும் உடல் நலப் பிரச்சினைகளை மீளாய்வு செய்த பின்னர், இந்த
முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கையின் மனித உரிமைகள் செயல்பாடு தொடர்பாக எழுந்துள்ள
சர்ச்சைக்கும் , பிரிட்டிஷ் அரசி இந்த மாநாட்டில் கலந்துகொள்ளாமல்
தவிர்த்திருப்பதற்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்று தோன்றுவதாக
பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
« PREV
NEXT »

No comments