சுதந்திர முன்னணியின் வேட்பாளராக தமிழீழ விடுதலைப்புலிகளின்
மகளிர் அரசியல்துறை தலைவி தமிழினி போட்டியிட உள்ளார்.
தற்போது வவுனியா புனர்வாழ்வு முகாமில் இருக்கும்
தமிழினி விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளதுடன் நீதிமன்ற
வழக்குகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட உள்ளார். இதற்கான ஏற்பாடுகளில் விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி ஈடுபட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடமாகாணசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களாக
பெரும்பாலானவர்கள் முன்னாள் போராளிகளே நிறுத்தப்பட உள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முன்னாள் போராளிகள் தேர்தலில் போட்டியிடுவதால் அவர்களை துரோகிகள் என்று கொச்சைப்படுத்த சில பேர் அலைவார்கள். அவர்களுக்கு நீங்கள் ஒட்டு போடவேண்டாம் அது போதும் ஆனால் துரோகிகள் பட்டம் வேண்டாம் ஏனென்றால் அவர்கள் ஒரு கைதிகள் இருக்கும் நிலை அப்படி இது இறுதியுத்ததில் கைது செய்யப்பட்ட போராளிகளுக்கே பொருந்தும்
No comments
Post a Comment