Latest News

May 30, 2013

விபச்சாரிகள் இருக்கும் இடத்தை சொல்லுங்கள் நானும் போக ஆசைப்படுகின்றேன்-றெமீடியஸ்
by admin - 0

யாழ்ப்பாணத்தில் விபச்சாரிகள் இருக்கும் இடத்தை சொல்லுங்கள் நானும் போக ஆசைப்படுகின்றேன் என றெமீடியஸ் சபையோரைப் பார்த்துக் கேட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது. யாழ். மாநகரசபையின் மே மாதத்திற்கான மாதாந்தக் கூட்டம் இன்று மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது யாழ்.மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் கலாச்சார சீர்கேடுகள் தொடர்வதாக எதிர்கட்சியினரால் கேள்விகள் எழுப்பப்பட்டு அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபையில் விவாதங்களும் நடைபெற்றன. அதில் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். மேலும் சபையில் றெமீடியஸ் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதிகளில் விபச்சாரம் நடக்கிறது என்று கூறுகின்றீர்களே தவிர எங்கு நடைபெறுகின்றது என்று கூறுகிறீர்கள் இல்லை. விபச்சாரிகளை சந்திக்க ஆசைப்படுகின்றேன் அவர்களின் விலாசத்தை தந்துதவுங்கள்.  நேரடியாக சென்று அவர்களைப் பார்க்கின்றேன். இதேவேளை, பதிவு செய்யப்பட்ட விடுதி உரிமையாளர்கள் எம்முடன் சண்டைக்கு வருகின்றார்கள். அவர்கள் எம்மிடம் கேட்கின்றனர் வரி தருகின்றோம் பதிவுகளை மேற்கொண்டுள்ளோம் ஏன் எங்களை தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்த நினைக்கிறீங்கள் என கேட்கின்றனர். எங்களுடைய யாழ்ப்பாணம் கலை கலாச்சாரத்தில் சிறந்த பிரதேசம் அதனை அழிக்க வெளிமாவட்டத்தில் இருந்து வந்துள்ள விசமிகள்  சிலர் முயற்சி செய்கின்றனர். அத்துடன் 18வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் தங்களுடைய விருப்பத்துடன் வெளியிடங்களில் தங்கி இருக்கும் போது அவர்களை பொலிஸ் உள்ளிட்ட யாராலும் கைது செய்யமுடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments