“கனவுகளுடன்
வீழ்ந்து போனவர்களின்
எண்ணங்கள் விரைவில் ஈடேற
வேண்டுமென்ற உறுதியுடன்”
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட
அலுவலகமான அறிவகத்தில்
இலங்கை அரசாங்கத்தால்
படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களின் ஆத்ம சாந்தி நிகழ்வு உணர்வுபூர்வமாக
அனுஸ்டிக்கப்பட்டது. 2009ம் ஆண்டு மே மாதம் மனித நேய
நடவடிக்கை என்ற பெயரால்
இலங்கை அரசாங்கத்தால் முள்ளிவாய்க்கால் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட
இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் இறந்துபோன
ஆன்மாக்களின் ஈடேற்றம்
வேண்டி இன்று காலை 8 மணிக்கு சைவ
ஆராதனை நிகழ்வும் கிறிஸ்தவ
ஆராதனை நிகழ்வும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில்
அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.
சிறீதரன் அவர்களுடன், தமிழரசுக் கட்சிக்கான கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சு. பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் நா.வை குகராசா, உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்கள் சு.தயாபரன், மா. சுகந்தன், ப. குமாரசிங்கம், சேதுபதி, இ.பொன்னம்பலநாதன், தவபாலன், சி.சிவச்செல்வன், வி.சுவிஸ்கரன், கிளிநொச்சி மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.சுரேன், மனித உரிமை செயற்பாட்டாளர்
சத்தியானந்தன், அக்கராயன் பிரதேச அமைப்பாளர் கு.சர்வானந்தன், வர்த்தக சங்கத் தலைவர் தி.சிவமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments
Post a Comment