Latest News

May 02, 2013

ராஜபக்சவிற்கு துணை போன நஜிப்பிக்கு எதிராக மலேசிய மக்கள் ஆர்ப்பாட்டம்
by admin - 0

தேர்தலுக்கு இன்னும்
மூன்று நாட்கள் இருக்கும்
வேளையில் மலேசியாவில்
உள்ள இளையவர்கள் மாபெரும்
போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர் . 2009 ஆண்டு ஈழத்தில் தமிழ்
மக்களை கொடுரமாக கொலை செய்த
ராஜபக்சவிற்கு ஆதரவளித்தும் ஐநா மனித
உரிமை கூட்டத் தொடரில்
இலங்கைக்கு ஆதரவாகவும் செயல்பட்ட நஜிப்
அப்துல் ரசாக்க்கு எதிராக போராட்டம் நடை பெற்றது. நஜிப் அப்துல் ரசாக் அவர்களை நாளை மறுநாள்
நடைபெற இருக்கும் தேர்தலில் தமிழ் மக்கள்
அனைவரும் புறக்கணிப்பதாகவும் தமிழ்
மக்களின் வாக்குகள் இனிவரும் காலங்களில்
நஜிப் அப்துல் ரசாக்
அவர்களுக்கு கிடைக்காது என்றும் மலேசியாவில் போராட்டம் நடத்தினர் . இதில் தமிழ் இன
படுகொலைக்கு துணை நின்ற
சோனியா காந்தி மற்றும் கருணா, மன்மோகன்
சிங், கருணாநிதி, சுப்பிரமணிய
சுவாமி ஆகியோரின்
கொடும்பாவி இறுதியில் எரிக்கப்பட்டது.





« PREV
NEXT »

No comments