Latest News

May 22, 2013

அடக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பது அவசியம்; யாழ். பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத் தலைவர் தெரிவிப்பு
by admin - 0

சாதாரண மக்கள் இன்றும் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். மக்கள் அவ்வாறு அடக்கி ஒடுக்கப்படுகின்றபோது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை தொழிற்சங்கம் என்ற வகையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களுக்கும் உண்டு. இவ்வாறு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்தார்.

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக வாயிலில் நேற்று நடந்த கவனவீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்,
பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கம் என்ற ரீதியில் பல்கலைக்கழகத்தில் மட்டுமன்றி நாட்டில் எந்தவொரு மக்களும் அடக்கி ஒடுக்கப்படுகின்ற போது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை எமக்கு உண்டு.

எதிர்காலத்தில் மக்கள் நசுக்கப்படும் போது அடக்கப்படும்போது அதற்கெதிராக நாம் குரல் கொடுப்போம் என்றார்.
« PREV
NEXT »

No comments