Latest News

May 08, 2013

கே பி ஆரம்பித்தார் பிரசாரம்
by admin - 0

வடக்கு தேர்தல் தொடர்பில்
அரசாங்கத்தின் பிரநிதிகளுக்கிடையில் பல்வேறு போட்டி நிலைப்பாடுகள் உள்ள நிலையில் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனும் யாழ்ப்பாணத்தில் தனது பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளார். இவர் வந்த வேகத்திலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை வம்பிற்கு இழுத்து கடும் விமர்சனம் செய்துள்ளதோடு தனது துரோகத் தனங்களை தொடர்ந்து அரங்கேற்றுவதற்கான அடித்தளங்களை யாழ்ப்பாணத்தில் அமைத்து வருகின்றார். ஊடகங்களின் குரல்வளையை அமைச்சர் டக்ளஸ் தான் நெருக்குவேன் என்று தெரிவித்த கருத்திற்கு கடும் கண்டம் வெளியிட்ட கே.பி, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்த நிலைப்பாட்டையும் தான்
எடுக்கவில்லையென்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை இப்பொழுதே வடக்கு தேர்தலில் அரசாங்க தரப்புக்கள் தமக்குள்ளே உள்ள போட்டி காரணமாக
ஒருவரை ஒருவரை விமர்சனம் செய்யத்
தொடங்கியுள்ளனர்.
« PREV
NEXT »

No comments