Latest News

May 14, 2013

கிளிநொச்சி பொறியியல் பீடம் செப்டெம்பரில் இயங்கும்! அடித்துக் கூறுகிறார் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம்
by admin - 0


யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக பொறியியல் பீடம் 2013 செப்டெம்பர் மாதம் இயங்கவுள்ளதாக பேராசிரியரும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.
2013ம் ஆண்டு பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களை முதற்கட்டமாக கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழ். யூரேவில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற “மாற்றத்திற்கான குரல்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி வளாகத்தில் தற்போது காணப்படும் கட்டடங்களை புனரமைப்பதற்கு அதிகளவான காலம் தேவை என்பதால், தற்காலிகக் கட்டடங்களில் முதல்கட்டமாக பாடங்கள் ஆரம்பிக்கப்பட இருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்த கட்டடங்களை புதுப்பிப்பதற்கு 1.53 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இறுதிக்கட்ட யுத்தத்தை அடுத்து படையினர் வசமிருந்த யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மற்றும் விவசாய பீடம் அமையவுள்ள கிளிநொச்சி அறிவியல் நகர் பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்தப் பீடங்களின் நிர்மாணப் பணிகளை துரித்தப்படுத்தும் நோக்குடனும், கிளிநொச்சியில் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவது குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடனும் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியை 2012 செப்டெம்பர் 27ஆம் திகதி 26 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், ஊடகத்துறை சார்ந்தவர்கள் என 2,740 பேர் சிரமதானம் செய்தனர்.

இதேவேளை, “மாற்றத்திற்கான குரல்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய பொறியியலாளர் றாமதாசன, வீதிகள் மற்றும் கட்டடிடங்களை புனரமைத்துவிட்டு வடக்கில் அபிவிருத்தி நடைபெற்றுள்ளதாக அரசாங்கம் சர்வதேச நாடுகளுக்க கூறுவதாகவும், அதனை சரவ்தேசமும் பாராட்டி பேசுகின்றதாக தெரிவித்ததுடன், தற்போது வடக்கில் நடைபெறும் அபிவிருத்திகள் எல்லாம் உண்மையில் அபிவிருத்தியா அல்லது அரசியல் நாடகமா” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தன்னுடைய பார்வையில் பேராட்டத்தால் சிதைந்து போன வீதிகளை முதலில் அபிவிருத்தி செய்தால் தான், ஏனைய அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியும். தற்போது நடைபெறும் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் மக்களுக்காக செய்யப்படுவதாகவே தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
« PREV
NEXT »

No comments