ஹிங்குராங்கொட பஸ் நிலையத்திற்கு அருகில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் 23 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக இக்கொலை இடம்பெற்றுள்ளதென ஹிங்குராங்கொட
பொலிஸார் தெரிவித்தனர். கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நேற்று நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
No comments
Post a Comment