Latest News

May 28, 2013

நந்திக்கடலை நோக்கி செல்லமுன்பு சக போராளிகளுக்கு தலைவர் கூறிய வாசகம்
by admin - 0

தனது 17 வயதில் ஒரு அரசிற்கு எதிராக
போராடியே தீர்வது, தமிழருக்கான
விடுதலையை நான் முன்னெடுத்து செல்வேன் என்ற ஓர் திடமான முடிவோடு களத்தில் இறங்கிய பின்னர் , தனது 20வது வயதெல்லையில் தாயாரை ஒருமுறை சந்தித்த போது ‘‘ அண்ணா அக்கா எல்லாம்
வெளிநாட்டிற்கு போயிட்டார்கள் நீயும் போவேன் குட்டிமணி தங்கத்துறையையும் கைது செய்தாச்சு நீ
என்ன செய்யப்போகிறாய் ” என்று வினாவிய
போதே ........ ‘‘ நான் அவர்களை நம்பி போராட வரவில்லை யாரையும் நம்பி நான் போராட தொடங்கவில்லை நான் என்னை நம்பித்தான் இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளேன் ” என்ற ஓர் திடமான ஓர் முடிவோடு போராடத் தொடங்கிய எமது தலைமை , பின்னாளில் தனது 30வது வயது எல்லைகளில் இந்திய
பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்த
போது ( அப்போது இந்திய பிரதமரின் சர்வதேச
மட்ட செல்வாக்கை எதிர்வு கூறியிருந்தும் ) ‘‘ உங்களுக்கு என்ன
உதவி தேவை தேவையானவற்றை கேளுங்கள் ” என்ற
போது ..... ‘‘நீங்கள் எமக்கு ஒரு பயிற்சி முகாமை மட்டும்
நடாத்த அனுமதி தந்தால் போதும் மிகுதியை நாம் பார்த்துக்கொள்கிறோம்” என்ற எமது தலைமை , அன்றைக்கே யாரையும் எதற்கும் எதிர்பார்த்து நின்றதில்லை. 3 தசாப்பதங்களாக களத்தில் இருந்து இலங்கையின் பற்பல களமுனை அரசியல் தலைமைகளையும்
அறிந்து , பல இந்திய தமிழக தலைமைகளையும் கண்டுணர்ந்து பின்னாளில் 94ம் ஆண்டில்
போராட்டத்தினுள் அடியெடுத்து வைத்த சர்வதேச தலையீடுகளையும் அவர்களின் சதி நகர்வுகளையும் சந்தித்துத் தன்னைத் தானே புடம் போட்டுக்
கொண்டு , தனது 54வது வயதில் உலக நாடுகளின் சதிவலையால் பின்னப்பட்டு அந்த மண்ணிற்குள் தன் விருப்பத்திற்குரிய மக்களுடன் தனிமைப்படுத்தப்பட்டு நின்ற போது ‘‘ போரை வெற்றி கொள்ள கே.பியோ கஸ்ரோவோ தனக்கு உதவி செய்வார்கள் , இல்லை நோர்வேயோ அமெரிக்காவோ வரும் என்றோ, இந்திய தமிழக தலைவர்கள்
மாற்றங்களை தருவார்கள் என்றோ , எதிர்பார்த்துக் கொண்டு அந்த முள்ளிவாய்க்காள் மண்ணில் காத்திருந்திருந்திருக்கப் போவதில்லை. அப்படி அவர் சொல்லுகிறார், இவர் சொல்கிறார் என்று அடுத்தவரை குற்றம் காண்பவராக நீங்கள் யாராவது எண்ணிக் கொண்டிருப்பீர்களேயானால்
என்மீதும் உங்கள் மீதும் தமிழர்களாகிய எம்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை தான் நீங்கள் சிதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம். அவர் மக்களை நம்பினார்...
அவர்கள் தமிழீழம் என்ற உயரிய இலட்சியத்திற்காய் எந்தப் பெரிய தியாகங்களையும் செய்ய துணிவார்கள் என்று நம்பினார்.. எத்தனை அழிவுகளை கண்டிருந்தாலும் அந்த உயரிய இலட்சியத்தை எனது மக்கள் கைவிட மாட்டார்கள் என்று நம்பினார்....
எமக்கு பின்னாள் இந்த போராட்டத்தை அவர்கள் திறம்பட முன்னெடுத்து செல்வார்கள் என்று நம்பினார்.... தமக்கிடையே உள்ள
பேதங்களை மறந்து விரோதங்களை துறந்து ஒன்றினைந்து இந்த அரிய இலட்சியத்தை அடைய தொடர்ந்து போராடுவோம் என்று நம்பினார்... மண்ணுக்காய் மரணித்த மாவீரரை விழுப்புண் ஏய்தி போராளிகளை கைதாகி சரணடையும் அந்த வீரர்களை அவர்கள் தம் குடும்பங்களை எனது மக்கள்
அரவணைத்து காத்து அவர்களை கௌரவத்துடன்
நடாத்துவார்கள் என்று நம்பினார்... நான் விட்டுச் செல்லும் இந்த உறுதியான தெளிவான நேர்த்தியான அத்திவாரத்தின் மீது எனது மக்கள் தெளிவான உறுதியான ஒரு தமிழீழ தேசத்தை கட்டியமைப்பார்கள் என்று நம்பினார். ஆனால் நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்
இப்போது.....!!!!!! யார் துரோகிகள் .....!!!!!!! யாரை யார் ஏமாற்றியது ......!!!!!! சிந்தித்துப் பார்ப்போமா . அந்த தலைமையின் 58வது பிறந்த தினத்தில் என்ன
சொல்லி வாழ்த்தப் போகிறோம் நாம்....
பிரபாகரன் சிறந்த போராளி, மாவீரன். அவர் தன் மண் மீதும் மக்கள் மீதும் பாசம்கொண்டவர். ஆனால், அவர் ஓர் நல்ல அரசியல்வாதி அல்ல. : விகடன்
நேர்காணலில் விக்ரமபாகு கருணாரத்ன # உண்மைதான்..அவர் ஒரு அரசியல்வாதி இல்லைத்தான்.. ஏனென்றால் அவருக்கு நடிக்கத்தெரியாது. உள்ளொன்று வைத்து வெளியாக ஒன்று பேசத்தெரியாது. எதையும் நேர்பட
பேசவே தெரியும். கியூபா விடுதலை அடைந்தபோது கஸ்ரோ சேகுவ பொறுப்பில் அமர்த்த
முற்பட்டபோது சே கூறியது இது " நான்
போராளி. எனக்கு அரசியல்வாதியாக இருக்க தெரியாது". மே 16 ம் திகதி நள்ளிரவு கடைசி நேர தீர்வுத்திட்டம்
ஒன்றை முன்வைத்து தலைவரை வற்புறுத்திய போது தலைவர்
நந்திக்டலை நோக்கி செல்லமுன்பு சக
போராளிகளுக்கு கூறிய வாசகமும் இதுதான்.
"நான் போராளி. அரசியல்வாதி இல்லை" சேகுவேரைவைப்போல் தலைவரை வரலாற்றில்
நிறுத்திய வாசகம் இதுதான்.
« PREV
NEXT »

No comments