
இதே எதிர்பார்ப்பை இந்தி திரையுலகிலும் ஏற்படுத்தும் வகையில், ரஜினியை இந்தியிலும் பாட வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். வைரமுத்து தமிழில் எழுதிய பாடல் வரிகளை இஷாத் கமில் இந்தியில் மொழிப்பெயர்த்து கொடுக்க சமீபத்தில் தான் இந்திப் பாடலை ரஜினி பாடியிருக்கிறார்.
படத்தில் வரும் ரஜினியின் நம்பிக்கைகளையும், தத்துவங்களையும் குறிப்பிடும் வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் பாடலில் “மனிதன் மண் மீது பேராசைக் கொள்கிறான். ஆனால் கடைசியில் மனிதனை மண் தனக்குள் இழுத்துக்கொள்கிறது” என்பது போன்ற பொருள்படும் வரிகள் இடம்பெற்றிருக்கிறதாம்.
இந்த பாடல் இந்தியில் ரஜினி பாடும் முதல் பாடல் என்றாலும், தமிழில் இதற்குமுன்பே இளையராஜாவின் வற்புறுத்தலின்பேரில் ‘மன்னன்’ திரைப்படத்தில் ‘அடிக்குது குளிரு’ என்ற பாடலை ரஜினி பாடியிருக்கிறார்.
No comments
Post a Comment