13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலோ கருத்துக்கூறுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அதிகாரம் இல்லை. அவர் அரசாங்க அதிகாரியேயாவார். அரசியல் விடயங்கள் குறித்து பேசவேண்டுமானால் அவர் பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு வரவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆங்கில ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவித்திருந்தார். இந்த விடயம் குறித்து கேட்டபோதே சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
No comments
Post a Comment