Latest News

May 31, 2013

உயிருடன் தேள்களை உண்ணும் ஈராக் விவசாயி
by admin - 0

ஈராக்கை சேர்ந்த இஸ்மாயில் ஜசிம் முகமது(34) என்ற விவசாயி ஒருவர் உயிருடன் தேள்களை பிடித்து கடித்து உண்டு வருகிறார். இஸ்மாயில் ஜசிம் முகமது கடந்த 15 வருடங்களாக தேள்கள்
மற்றும் பாம்புகளுடன் வாழ்ந்து வந்து இருக்கிறார். அதனால் அவர் பலமுறை தேள்களால் கொட்டு வாங்கி மிகவும் அவதிப்பட்டிருக்கிறார். இதனால் வெறுப்படைந்த அவர் அவைகளை கடித்து உண்ணுவது என்ற முடிவை எடுத்தார். அன்றிலிருந்து கடந்த 15 வருடங்களாக உயிருடன் தேள்களை பிடித்து கடித்து உண்டு வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், மூன்று நாட்களுக்குள்
ஒரு தேளையாவது உண்ண வேண்டும் என்கிற கட்டாயத்தில் தினந்தோறும் நான்
தேள்களை உயிருடன் பிடித்து உண்டு வருகிறேன். பலமுறை வாயில் கடி வாங்கிய எனக்கு அதுவே எதிர்ப்பு மருந்தாக
மாறிவிட்டது என்றும் அவர் கூறுகிறார்.
« PREV
NEXT »

No comments