Latest News

May 25, 2013

கையில் வெள்ளை கொடியுடன் வந்தவருக்கு என்ன ஆனது புதிய ஆதாரம் இணைப்பு -படங்கள் இணைப்பு
by admin - 0

இலங்கை அரசால் 2009 மே மாதம் இறுதி யுத்தத்தில் பலாயிரக்கனக்கான மக்களை ஈவிரக்கம் இல்லாமல் கொன்று குவிக்கப்பட்டது .பல நாட்டு உதவுயிடன் அழித்தொழிக்கப்பட்ட தமிழீழ மக்கள் வெள்ளைக்கொடியுடன் போர் மரபுக்கு ஏற்றப சரண் அடையவந்த தமிழ்மக்களும் மற்றும் விடுதலைப்புலிகளும் போர் மரபுகளுக்கு எதிராக கொன்று குவிக்கப்பட்டார்கள். இதில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர்களும் போராளிகளும் அடங்குவார்கள் வெள்ளைக்கொடி விவகாரம் இலங்கை அரசை கழுத்து பிடி பிடித்து இறுக்கிவரும் இவ்வேளையில் வெள்ளைக்கொடியுடன் வரும் ஒருவரின் படம் தற்பொழுது வெளியாகியிருக்கிறது. வெள்ளைக்கொடியுடன் வந்தவர் பின்னர் கைகள் கட்டப்பட்டு இருக்கும் படங்கள் முன்னர் வெளிவந்திருந்தது. தற்பொழுது அவர் வெள்ளை கொடியுடன் வருவது வெளிவந்திருப்பது இலங்கை அரசின் அப்பட்டமான போர் குற்ற ஆதாரம், மற்றும் வெள்ளைக்கொடியுடன் சரணடைத்த செய்திக்கு வலுசேர்க்கும் ஒரு ஆதாரம் என்பதுக்கு மற்று கருத்து இல்லை.









தமிழ் இணையங்கள் தங்களுக்குள்ள போட்டியின் வெளிப்பாடு போர் குற்ற ஆதார படங்களை வெளிவிடுவதிலும் உள்ளதை நினைக்கும் போது தமிழரின் ஒற்றுமை கேள்விக் குறியாகிறது. இணையங்கள் செய்தி மூலம் கேட்க அல்லது லோகோ இல்லாமல் படத்தை தர விவசாயி இணையம் தயார் தொடர்ப்புக்கு

சரவணை மைந்தன்
www.vivasayii@gmail.com
« PREV
NEXT »