பிரிட்டனின் வான்பரப்புக்குள் வந்த பயணிகள் விமானமொன்றுக்குள் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை அடுத்து, அதனை வழி மறித்த போர் விமானங்கள் அவசரமாக வேறு விமான நிலையத்தில் தரையிறக்கின. பிரிட்டனின் வான்பரப்புக்குள் பறந்த பாகிஸ்தான்
இண்டர்நாஷனல் ஏர்லைன்ஸ் பயணிகள்
விமானமொன்றுக்குள் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை அடுத்தே அதனை வழி மறித்து பாதுகாப்பு வழங்க பிரிட்டிஷ்
விமானப்படைக்குச் சொந்தமான டைபூன் ஜெட் போர் விமானங்கள்
அனுப்பப்பட்டன. பாகிஸ்தானில் லாகூரில் இருந்து பிரிட்டனின் மான்செஸ்டர்
விமானநிலையத்துக்கு சென்று கொண்டிருந்த இந்த விமானம் இந்த
விவகாரத்தை அடுத்து, லண்டனுக்கு அருகே உள்ள ஸ்டான்ஸ்டட் விமான
நிலைய ஓடுபாதையில் தரையிறக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது அந்த விமானத்தில் 297 பயணிகள் இருந்துள்ளனர். இதற்கிடையே விமானத்துக்கு ஆபத்து ஏற்படுத்த விளைந்ததாக இருவர்
கைது செய்யப்பட்டுள்ளனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.
No comments
Post a Comment