Latest News

May 08, 2013

பிரிட்டன் பிரதமர் டேவிட்கமருனின் தீர்மானத்திற்கு ஈழஆதரவாளாகள்எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்
by admin - 0

விவசாயி இணையத்தை like(விருப்பம் ) செய்து விட்டு வெளியேறுங்கள் ...
பிரிட்டன் பிரதமர் டேவிட்கமருனின் தீர்மானத்திற்கு ஈழஆதரவாளாகள்எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாயநாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கப் போவதாக பிரதமர் கமருன் அறிவித்துள்ளார். இந்தத் தீர்மானத்திற்கு ஈழ ஆதரவாளர்கள் கடும்எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எதிர்ப்பை வெளியிடும் நோக்கில்கொன்சவேட்டிவ்கட்சி உறுப்புரிமையை துறக்கவும், முக்கியபதவிகளை இராஜினாமா செய்யவும் ஈழஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பில் பிரிட்டன் தமிழர் பேரவைக்கும், உலகத் தமிழர் பேரவைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எனினும், பதவிகளை இராஜினாமா செய்ய சிலஈழ ஆதரவாளர்கள் விரும்பவில்லை என சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. ஈழ ஆதரவாளர்கள் பலர் கொன்சவேட்டிவ் கட்சியின் நகரசபை உறுப்பினர்களாக கடமையாற்றி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments