Latest News

May 02, 2013

இலங்கையில் கொஞ்சமும் பாதுகாப்பு இல்லை
by admin - 0

இலங்கை பாதுகாப்பற்ற சுவர்க்கபுரி என்று பிரித்தானிய நாடாளுமன்ற
உறுப்பினர் சைமன் டன்ஸக் எச்சரித்துள்ளார். இந்த நிலையில் பிரித்தானியர்கள்
இலங்கைக்கு சுற்றுப் பயணம்
மேற்கொள்வதை தவிர்க்குமாறு அவர்
கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த வருடம் தங்காலை பகுதியில்
வைத்து பிரித்தானிய பிரஜை ஒருவர்
குழு ஒன்றினால் பாலியல் துஸ்பிரயோகம்
செய்யப்பட்டதுடன். மற்றுமொருவர்
கொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பான
விசாரணைகளை அவதானிப்பதற்காக குறித்த
நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கைக்கு விஜயம்
செய்திருந்தார். இந்த நிலையிலேயே அவர் இந்த
கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் சுற்றுலாப்
பயணிகளுக்கு கொஞ்சமும்
பாதுகாப்பு இல்லை என்று அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். கொலை செய்யப்பட்ட பிரித்தானிய
பிரஜைக்கு நியாயம் கிடைக்கும்
என்று எதிர்பார்த்த போதிலும்,
அது இலங்கையில் இல்லை என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments