காத்தான்குடியில் தாயை அடித்து கொலை செய்த மகனை எதர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா உத்தவிட்டுள்ளார் என
காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடியில் கடந்த வியாழக்கிழமையன்று புத்தி சுவாதீனமுற்ற மகன் தாயை அடித்து கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவரான எம்.இர்ஷாத் சந்தேக நபரை காத்தான்குடி பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதன் போது எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா உத்தவிட்டுள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். வியாழக்கிழமையன்று காத்தான்குடி பாவா லேனில் வசித்து வந்த ஏ.றஹ்மத்தும்மா (54)
என்பவரை அவரது புத்திசுவாதீனமுற்ற மகன் தாக்கி அடித்து கொலை செய்திருந்தார். இவர் ஒரு புத்தி சுவாதீனமுற்றவர் என அவரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். இவர் முன்பும் தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்ளையெல்லாம்
உடைத்ததுடன் பொதுமக்கள் இவரை பிடித்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்ஒப்படைத்தனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி இவர்; அங்கோடையிலுள்ள உள நல வைத்திய சாலையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்று அங்கிருந்து வந்து மட்டகக்ளப்பு போதனா வைத்திய சாலையின் மன நல சிகிச்கை பிரிவின் ஆலாசனைப்படி சிகிச்சை பெற்று வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment