Latest News

May 06, 2013

சனாநாயக வழிமுறையில் சிறிலங்காவின் இறையாண்மைக்கு சாவல்விடும் நா.க.த.அரசு : இலங்கை சீற்றம்!
by admin - 0

இலங்கையின் தமிழர் தாயகப்
பகுதியில் தமிழீழ
அரசு ஒன்றினை அமைக்கும்
நோக்கும் இயங்குகின்றதென
தெரிவித்துள்ள சிறிலங்கா அரச ஊடகம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்காவின்
இறையாண்மைக்கு சவால் விடும் வகையில்
செயற்படுகின்றது என தனது சீற்றத்தினை வெளிப்படுத்தியுள்ளது. பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டினை சிறிலங்காவில்
நடத்தக்கூடாது என வாதிட்டவரும் கனடிய
அரசினை சாடி வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பொன்றிலேயே நாடுகடந்த
தமிழீழ அரசாங்கத்தின் மீதான சீற்றத்தினை சிங்களம் பதிவு செய்துள்ளது. சனாநாயக வழிமுறையூடக சிறிலங்காவுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது சனநாயகவழிமுறையூடாக
பயங்கரவாதத்தினை நிலைநிறுத்துவதற்கான
முயற்சியென சிறிலங்கா அரசு வர்ணிப்பதாக தெரிவித்துள்ள அரச ஊடகம் இத்தகைய
நிலைப்பாட்டினைக் கொண்டுள்ள நாடுகடந்த
தமிழீழ அரசாங்கத்தின் சுதந்திரமான
செயற்பாடுகளுக்கு கனேடிய அரசு ஏன்
அனுமதி கொடுத்துள்ளது எனவும்
கேள்வியெழுப்பியுள்ளது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர்
மேற்குலக நாடுகளில் சனநாயகவழிமுறையில்
தேர்தல் ஊடாக உருவாக்கப்பட்ட நாடுகடந்த
தமிழீழ அரசாங்கமானது மென்வலுவூடாக
இலங்கையில் தமிழீழ
அரசினை நிறுவுவதனை நோக்கமாக கொண்டு அதனுடைய அரசியல்
யாப்பு அமைக்கப்பட்டுள்ளது எனும் அவ்வூடகம்
தெரிவித்துள்ளது. இதேவேளை தமிழீழ சுதந்திர
சாசனத்தினை மையமாக கொண்டு நாடுகடந்த
தமிழீழ அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட
ஒன்றுகூடல் உள்ளக நிகழ்வொன்றில்
சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்த
Amnesty அமைப்பின் கனேடிய பிரதிநிதிக்கு சிங்கள அரச ஆதரவு ஊடகம்
தனது சீற்றத்தினை வெளிப்படுத்தியுள்ளது என
நாடு கடந்த தமிழீழ அரசு தெரிவித்துள்ளது.

« PREV
NEXT »

No comments