போரின் வடுக்கள். சுமார் 26 நிமிடம் நீளமுள்ள இந்த ஆவணப்படத்தில் தோன்றும் தமிழ் தாய் ஒருவர், போரில் தனது பிள்ளை மற்றும் உறவுகளை எவ்வாறு இழந்தார் என்று விவரிக்கிறார். கிபீர் விமானம் குண்டு போட்டதில் தனது மகனின் தலை துண்டாகிப் பறந்ததாக அவர் கூறியுள்ளார். இதனை முதல் பாகத்தில் காட்டியுள்ள BBC பின்னர் நமால் ராஜபக்ஷவிடம் கேள்விகளை தொடுத்துள்ளது. வடக்கிற்கு பி.பி.சி நிருபர் செல்லும் போது கூடவே நமாலும் சென்றுள்ளார். தாங்கள் வருவதை அடுத்து மக்கள் கூட்டமாகக் கூடியதாகவும் ,BBC க்கு காட்டவேண்டும் என்று தான் இக் கூட்டம் கூட்டப்பட்டதாகவும் BBC நிருபர் தெரிவித்துள்ளார்.
வரவேற்ப்பு முடிந்த பின்னர் நமாலை தனியாக அழைத்துச் சென்ற நிருபர் அவரை வறுத்து எடுக்கும் கேள்விகளை கேட்டு துளைத்துள்ளார். போரில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இலங்கை அரசால் கொல்லப்பட்டதும், பலர் காணமல் போனதும் மற்றும் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டி கேள்விகளை தொடுத்தார். இதற்கு பதிகூறிய நமால், தென்னிலங்கையில் புலிகள் குண்டுவைத்தார்கள், மக்கள் வங்கியை தகர்த்தார்கள் என்று கூறினார். இருப்பினும் பல்லாயிரக் கணக்கான மக்கள் இலங்கை அரசால் தானே கொல்லப்பட்டார்கள் என்று BBC நிருபர் மீண்டும் சாடினார். தாம் அப்படி எண்ணவில்லை என்று சொல்லி , நமால் தப்பிக் கொண்டார்.
srilankaow_130514_open_wounds_16x9_hi by dm_507388fc0b6e9
No comments
Post a Comment