தமிழீழ தனியரசுக்கு தேவையான அனைத்து தேவைகளும் தேசிய தலைவர்களால் உருவாக்கப்பட்டு மிகவும் நேர்த்தியாக நீதி வழுவாமல் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. பல நாடுகளின் உதவியுடன் அல்ல பல நாடுகள் சேர்ந்துதான் ஆட்சியை ஆயுத ஆட்பலம் கொண்டு இன அழிப்பு ஒன்றை செய்து முடித்தார்கள். இலங்கை இறையாண்மையை என்று கூறி தமிழீழத்தின் இறையாண்மையை அழித்து எமது இனத்தை தனிமைப்படுத்தியது. எமது இனத்தை அழிப்பதற்கு அவர்கள் எமது பாதுகாப்பு அரண்களை பயங்கரவாத அரண்கள் என்று ஒரு ஆயுதத்தை இவர்கள் பாவித்தார்கள் அதற்க்கு அவர்கள் கூறுகின்ற காரணங்களில்
யாழில் இருந்து முஸ்லிம் சகோதரர்களை வெளியேற்றியமை ஒரு மிகப்பெரும் குற்ற சாட்டை முன்வைக்கிறார்கள் அதாவது ஒரு சிறுபான்மை இனத்தின் விடுதலைக்காக போராடம் போராட்ட அமைப்பு இன்னொரு சிறுபான்மை இனத்தை கூண்டோடு ஒருநாளில் வெளியேற்றுவது எப்படி ஏற்று கொள்ளலாம் ஆகவே நீங்கள் பயங்கரவாதிகளே என்பதை இன்றும் கூறுகிறார்கள்.ஒரு இனத்தை ஒரு இரவில் வெளியேற்றியது ஒரு மறுக்கமுடியா குற்றம். அவர்களை இப்படி வெளியேற்ற புலிகளுக்கு ஏற்பட தவிர்க்க முடியாமல் பல சம்பவங்கள் சில முஸ்லிம் சகோதரர்களால் தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கு எதிராக செய்யப்பட்டது அதாவது போராளிகள் பலபேர் சில முஸ்லிம் சகோதரர்களால் கட்டி கொடுக்கப்பட்டு ஸ்ரீலங்கா அரச படையால் கொல்லப்பட்டு மாண்டனர். இப்படியொரு செயல்களால் அன்று புலிகள் இப்படியான துர்ப்பாக்கிய நிலையை எடுத்தார்கள் ஆயினும் அதை அவர்கள் தவறு என்று சொல்லி பின் அவர்களை யாழில் வந்து குடிஏறலாம் என்று அறிவித்தார்கள். தமிழீழ விடுதலை போராட்டத்தில் இரண்டு முஸ்லிம் மாவீரர்கள் வீர காவியம் ஆனது குறிப்பிடத்தக்கது. எனவே பழையதை மறந்து அனைத்து தமிழ்பேசும் மக்களும் இணைந்து தமிழீழ விடுதலைக்காக ஆயுத வழியின்றி போராடுவோம். அப்போவாவது இந்த உலக நாடுகள் நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை ஒரு தேச இனவிடுதலை விரும்பிகள் எங்கள் விடுதலைக்காக நாங்கள் போராடுகிறோம் என்று உணரட்டும்.
சரவணை மைந்தன்
Social Buttons