Latest News

April 27, 2013

சர்வதேசம் எப்போதும் இலங்கை பக்கமே என்ன செய்வது
by admin - 0

கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்று திப்பு மோனி கொமன்வெல்த் செயலகம் அறிவித்துள்ளது. இன்று காலை நடைபெற்ற கொமன்வெல்த்
அமைச்சர்கள் மட்டக் குழுக் கூட்டத்தில்,
மாநாட்டின் இடத்தை மாற்றுவது குறித்து எவ்வித விவாதமும் இடம்பெறவில்லை என்று கூட்டத்துக்கு தலைம வங்கதேச வெளியுறவு அமைச்சர் திப்பு மோனி தெரிவித்துள்ளார். கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப்
பொறுத்தவரையில் அம்மாநாடு எங்கு நடக்கும்
என்பதை கொமன்வெல்த் உறுப்பு நாடுகளின்
தலைவர்கள்தான் முடிவு செய்வார்கள். அவர்கள் இதுகுறித்து ஏற்கனவே முடிவு செய்து விட்டா அந்த முடிவு தொடர்கிறது.
இது குறித்து அமைச்சர்கள் மட்டத்தில் மீள்
பரிசீலனை செய்ய முடியாது என்றும் அவர்
கூறினார். ஆனால் ஏனைய விடயங்கள் தொடர்பாக விவாதித்தோம். அதில் இலங்கை குறித்தும் நாங்கள் விவாதித்தோம். ஆனால்
அது குறித்து நாங்கள் வெளியே பகிரங்கமாக
கூற முடியாது என திப்பு மோனி தெரிவித்துள்ளார். 23வது கொமன்வெல்த் மாநாடு இலங்கையில்
நவம்பர் மாதம் 15 முதல் 17 வரையான
காலப்பகுதியில்
நடக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, போருக்கு பிந்தைய
இலங்கையில் பல
முன்னேற்றங்களை கண்டிருப்பதாக
கொமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம்
கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். 2013-ம் ஆண்டு கொமன்வெல்த்
மாநாட்டை இலங்கையில்
நடத்தக்கூடாது என்று பல்வேறு மனித
உரிமை அமைப்புகளும் புலம்பெயர் தமிழர்
பிரதிநிதிகளும்
கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த நிலையிலேயே தமது முடிவில்
மாற்றமில்லை என்று காமன்வெல்த் செயலகம்
அறிவித்துள்ளது. இதேவேளை, கொமன்வெல்த்.மாநாடு நடத்தப்படும்
இடத்தை இலங்கையிலிருந்து மாற்றுமாறு வலி
தமிழர்கள் கொமன்வெல்த்
செயலகத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments