இறுதிச்சடங்குகள் இன்று லண்டனின் செண்ட்
பால்ஸ் பேராலயத்தில் நடந்தன. பிரிட்டிஷ் அரசி எலிசபத் உட்பட 2000க்கும்
மேற்பட்ட அழைப்பு விடுக்கப்பட்டவர்கள்,
உலகெங்கிலிருந்தும் வந்து, இந்த அஞ்சலிப்
பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டனர். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் மற்றும்
அவரது அமைச்சரவை சகாக்கள், எதிர்க்கட்சித்
தலைவர் எட் மிலிபாண்ட், முன்னாள் பிரிட்டிஷ்
பிரதமர்கள் டோனி பிளேர், கார்டன் பிரவுன்
மற்றும் ஜான் மேஜர், லண்டன் மேயர் போரிஸ்
ஜான்சன் உட்பட பல பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். தாட்சர் சீமாட்டியின் உடலைத் தாங்கிய சவப்பெட்டியின் மீது பிரிட்டிஷ்
தேசியக் கொடி போர்த்தப்பட்டு, குதிரைகளால் இழுத்துவரப்பட்ட ராணுவ
பீரங்கி வண்டியில், ராணுவ இசைக் குழுவினர், மேலை நாட்டு சாஸ்திரீய
சங்கீதத்தின் பிதாமகன்களில் ஒருவரான, பீத்தோவன் இயற்றிய
இறுதி அஞ்சலி ஊர்வலத்துக்கான இசையை வாசித்து வர, அவரது பூதவுடல்
செண்ட் பால்ஸ் பேராலயத்துக்குக் கொண்டுவரப்பட்டது. வீதிகளின் இரு புறமும் வரிசையாகக் குழுமி நின்ற பார்வையாளர்கள்
பீரங்கி வண்டி செல்லும் போது கைதட்டி மரியாதை செலுத்தினர். பின்னர் ஃபாக்லந்து போரின் போது கலந்து கொண்ட ராணுவ,
கடற்படை மற்றும் விமானப்படைப் பிரிவுகளின்
வீரர்கள் இந்த சவப்பெட்டியை, செண்ட் பால்
பேராலயத்துக்குள் கொண்டு சென்றனர். அதன் பிறகு அங்கு இறுதிச் சடங்குகள்
நடத்தப்பட்டன. பேராலயத்தின் தலைவர்
தனது பிரசங்கத்தில், மார்கரட் தாட்சரை பற்றிய. ஒரு சிறிய உரை நிகழ்த்தினார். பின்னர் மார்கரட் தாட்சரின் பேத்தி,
அமாண்டா தாட்சர் அவருக்காக தாட்சரால்
தேர்ந்தெடுக்கப்பட்ட கிங் ஜேம்ஸ் பைபிள்
வாசகங்களை வாசித்தார். இதன் பின்னர் மார்கரட் தாட்சரின் உடல் தாங்கிய
சவப்பெட்டி பேராலயத்திலிருந்து மார்கரட் தாட்சரின் குடும்பத்தினர் மற்றும்
நெருங்கிய நண்பர்களால், லண்டனருகே உள்ள Mortlake தகனக்
கூடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட்து. மார்கரட் தாட்சரின் மறைவு, கொந்தளிப்பான
1980களின் சர்ச்சைக்குரிய
அவரது கொள்கைகளைப் பற்றிய
ஒரு விவாத்த்தை மீண்டும் பிரிட்டனில்
ஏற்படுத்திய்ருக்கும் நிலையில்,
அவரது எதிர்ப்பாளர்களும் தங்களது எதிர்ப்பை இந்த இறுதி ஊர்வலத்தின் போது காட்டினர். ஒரு சிறிய எதிர்ப்புக் குழுவினர்,
பீரங்கி வண்டி செல்லும்போது ,
திரும்பிநின்று கொண்டு, கேலிக்குரலெழுப்பிய
காட்சிகளையும் காண முடிந்த்து. சிலர் மார்கரட் தாட்சர் எப்படி 80களில்
அவரது கொள்கைகளால் மக்கள் பாதிக்க்ப்படுவதைப் பற்றி கவலைப்படாமல்
திரும்பிக்கொண்டாரோ, அதே போல, அவரது இறந்த்தைப்
பற்றி கவலைப்படாமல் தாங்களும் முகத்தைத் திருப்பிக்கொள்வதாக அவர்கள்
கூறினர்.
No comments
Post a Comment