அடுத்தக்கட்ட முன்னெடுப்பாக வரும் 12/05/2013
முதல் 17/05/2013 வரை தமிழகத்தின் 32
மாவட்டங்களிலிருந்தும் "தமிழீழ விடுதலைக்கான
மாணவர் சுடர் பயணம் " 8
கோடி தமிழர்களை நோக்கி பயணிக்க இருக்கிறது. அப்பயணம் இறுதியாக மே 17
அன்று தஞ்சாவூரில் உள்ள "முள்ளிவாய்க்கால்
நினைவிடத்தில் " வந்து சேர்கிறது. தமிழகத்தின்
அனைத்து பகுதியிலிருந்து வரும் "சுடர்களை"
அய்யா பழ.நெடுமாறன் மற்றும்
அய்யா இரா.நல்லகண்ணு ஆகியோர் தஞ்சையில் பெற்றுக்கொள்கின்றனர் இச்சுடர் பயணத்தின்
இரு முதன்மையான நோக்கங்கள்
1) 8கோடி தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் தமிழக சட்டமன்ற தீர்மானமான "தமிழீழத்திற்கான
பொதுவாக்கெடுப்பு" என்ற கோரிக்கையை ,
இந்தியா அரசின் அரசுக் கொள்கையாக அறிவிக்க
வலியுறித்தியும், மேலும்
இத்தீர்மானத்தை இந்தியாவே ஐ.நா. அவையில் முதன்மையான தீர்மானமாக கொண்டுவர வலியுறித்தியும்,
2) இலங்கையில்
நடைபெற இருக்கிற காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை , இந்தியா - இலங்கையில் நடத்தக்கூடாது என்பதை வலியுறித்தியும் மாணவர்களால் இச்சுடர்ப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.,இந்த மாபெரும் மாணவர் மற்றும் மக்கள் திரள் சுடர் பயணத்தில் பங்கெடுப்பது தமிழனாய் பிறந்த , மாந்த நேய பற்றுள்ள ஒவ்வொருவரின் தலையாய
கடமையாகும். மேலும் இச்சுடர்
பயணத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களும்
பேராதரவு தந்து மாணவர்களுக்கு உந்து சக்தியாக திகழவேண்டும் என இக்கூட்டமைப்பு அன்புடன்
கேட்டுக்கொள்கிறது. ( இச்சுடர் பயணம் பற்றிய தகவலறிய தொடர்பு கொள்க: சீ.தினேஷ் -
ஒருங்கிணைப்பாளர் :தொலைபேசி -9791162911
No comments
Post a Comment