தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக
பணிபுரிகிறேன்.எந்தக் கட்சி ஜாதி மதம் அரசியல்
சார்பும் அல்லாமல்
மாநிலம் முழுவதிலிருந்தும் போராட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்லக்
கூடிய மாணவர்கள்
(ஒருங்கிணைப்பு குழுக்கள் )அனைவரையும் ,ஒவ்வொரு மாவட்டத்திலிருந ்தும் 10 மாணவர்கள் வீதம் தமிழ்நாடு முழுவதும் 250
மாணவர்களை சென்னைக்கு வரவழைத்து ஒரு சிறப்பான
கருத்தரங்கை ஏற்ப்பாடு செய்திருக்கிறேன். மாணவர்களுக்கு விழிப்புணர்வும் திட்டமிடுதலும்
ஒற்றுமையும் தேவை என்பதை கருத்தில்
கொண்டு இதனை ஏற்ப்பாடு செய்துள்ளேன்.
இந்தக் கருத்தரங்கில்
மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கக்
கூடியவர்கள் 6 பேரை அழைத்திருக்கிறோம் . 1.பா.ஜெயப்பிரகாசம் , தீபம் சுடர் எழுத்தாளர் (65
இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் தலைவராக
இருந்தவர் .
2.பேராசிரியர் .சரஸ்வதி ,தமிழ் ஈழ பெண்கள்
அமைப்பிற்கான ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்.
3.பேரசிரியர் .திருமாவளவன் .அம்பேத்கர் அரசு கலைக் கலூரி ,(65 போராட்டங்களில்
ஒருங்கிணைப்பு குழுவில்
இருந்தவர்களை வழிநடத்திச் சென்றவர்.
4.த .ஸ்டாலின் குண சேகரன்.(மக்கள் சிந்தனைப்
பேரவைத் தலைவர் ,சமூக ஆர்வலர் ,ஈரோடு .எந்தக்
கட்சியையும் சேராத மிகச் சிறந்த பேச்சாளர் .) 5.பேராசிரியர் ,அரசேந்திரன் ,(சென்னை கிறித்துவக்
கல்லூரி )ஈழத்துப் பெண்
யாழினியை மணந்து கொண்டு போராட்டக்
களத்தில் இருந்தவர்.
6.திரு.ந,அரண முருவல் ,உலகத் தமிழ்க் கழகத்
தலைவர்.(சென்னை செந்தமிழ் நிறுவனம்.அனைத்த ு விடுதலைப் போராட்டங்களையும்
ஆய்ந்து தெளிந்தவர். இந்த கருத்தரங்கத்தில் மாணவர்களுடன் விவாதங்களும்
நடைபெறும்.
முடிந்த அளவிற்கு மாணவர் ஒருங்கிணைப்புக்
குழுக்களுக்கு இதனைத் தெரியப் படுத்தவும்.(அனைத்து து மாவட்டங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.) சென்னை எழும்பூரில் நடத்த அரங்கம்
ஏற்பாடு செய்துள்ளோம்.
மாணவத் தலைமைகளை வரவேற்கிறோம்.
ஒற்றுமையே பலம் .
தொடர்பு கொள்ளவும் 9952819801j
No comments
Post a Comment