
வடகொரியாவின் எல்லைப் பகுதியில், அமெரிக்க ஹெலிகாப்ட்டர் ஒன்று விழுந்து நொருக்கியுள்ளது. இது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது என ரூய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து போர் ஒத்திகைகளை நடத்திவந்தது. இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா அமெரிக்க மற்றும் தென்கொரிய நிலைகளை தாக்க, தனது துருப்புக்களை நகர்த்தியது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க அமெரிக்கா தனது போர் ஒத்திகைப் பயிற்சிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியது. இருப்பினும் அமெரிக்கா சில தினங்களுக்கு முன்னர் அதனை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இன்று நடைபெற்ற ஒத்திகைப் பயிற்சிகளின் போது அமெரிக்காவின் அதி நவீன தாக்குதல் ஹெலிகாப்ட்டர் ஒன்று விழுந்து நொருங்கியுள்ளது.
இந்த CH- 53 ரக ஹெலிகாப்ட்டரில் பறந்த 21 பேரும் உயிர்பிழைத்துள்ளார்கள். ஆனால் இந்த ஹெலிகாப்ட்டர் மீது வடகொரியா தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனை அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம் இதுவரை உறுதிசெய்யவில்லை. இருப்பினும் இச் செய்திகள் பல ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்சமயம் குறிப்பிட்ட ஹெலிகாப்ட்டர் ஏன் விழுந்து நொருங்கியது என அமெரிக்கா ஆராய்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடகங்கள் தெரிவிப்பதுபோல வடகொரியா இத்தாக்குதலை நடத்தியிருக்குமே ஆனால், பாரிய பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
No comments
Post a Comment