Latest News

April 06, 2013

கிளிநொச்சி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் உள்ளனர்! பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்
by admin - 0

கிளிநொச்சி மாவட்டத்தில்
2012-2013ம்
ஆண்டுகளுக்கான
பெரும்போக
நெற்செய்கையில் 27ஆயிரத்து 851ஏக்கர் வயல்நிலம்
முழுவதுமாக அழிவடைந்துள்ள நிலையில்
8ஆயிரத்து 516 குடும்பங்களைச் சேர்ந்த
மக்கள் எந்தவிதமான நஷ்டஈடும் பெறாத
நிலையில் தற்கொலை செய்துகொள்ளும்
மனோநிலையில் இருப்பதாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்
சி.சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார். மாவட்டத்தில் நெற்செய்கையில்
அழிவுகளை சந்தித்த
விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க
வலியுறுத்தி பொருளாதார
அபிவிருத்தி அமைச்சிற்கு கடிதம்
அனுப்பியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் குறித்த விடயம் தொடர்பில் கருத்துத்
தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட் விடயம் தொடர்பில் மேலும் அவர்
குறிப்பிடுகையில், 2012ம் ஆண்டு 2013ம் ஆண்டுகளுக்கான
பெரும்போக நெற்செய்கை சுமார்
56ஆயிரத்து 193ஏக்கர் நிலப்பரப்பில்
15ஆயிரத்து 564குடும்பங்களைச் சேர்ந்த
மக்களால் மேற்கொள்ளப்பட்டது. இதில்
27ஆயிரத்து 851ஏக்கர் நெற்செய்கை முழுவதுமாக அழிக்கப்பட்டது.
இதனால் 8ஆயிரத்து 516குடும்பங்களைச்
சேர்ந்த மக்கள் மிகப் பாரதூரமான வாழ்வாதார
நெருக்கடியினை எதிர்கொண்டிருக்கின்றார்க மேலும் இந்த அழிவு தொடர்பில்
மேற்கொள்ளப்பட்ட மொத்த
அழிவு தொடர்பான கணிப்பீட்டின்
படி 13கோடியே 20லட்சத்து 12ஆயிரத்து 40 இதேபோல் 2012ம்
ஆண்டு சிறுபோகத்தின்போதும்
3ஆயிரத்து 906ஏக்கர் நெற்செய்கை நிலம்
முழுவதுமாக அழிந்து போனது இதற்கும்
இதுவரை எந்தவிதமான நஷ்டஈடும்
வழங்கப்படவில்லை. இத்தனையும் மிகமோசமான யுத்தத்தினால்
பாதிக்கப்பட்டு தறப்பாள்களுடனும்,
தகரங்களுடனும் சொந்த இடங்களுக்குத்
திரும்பிய மக்கள் வங்கிகளில் கடன்களைப்
பெற்றே மேற்கொண்ட நிலையில் அவ்வளவும்
முழுவதுமாக அழிவடைந்த நிலையில் அந்த மக்கள் எவ்வாறு வங்கிகளில் பெற்ற
கடன்களை செலுத்த முடியும்? வங்கிக்
கடன்களை செலுத்த முடியாத நிலையில் பலர்
தாம் தற்கொலைசெய்யும் மனோநிலையில்
இருப்பதாக
கண்ணீரோடு மனந்திறந்து கூறுகிறார்கள். இத்தனை நடந்திருந்தும் இன்றுவரை மாவட்ட
மட்டத்தில் அழிவடைந்த விவசாய
நெற்செய்கை விபரம் முழுமையாக
கணிப்பிடப்படவில்லை, அந்த
விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு இத
ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுத்திருக்கவில்லை. அரசாங்க
அதிபரை தொடர்புகொண்டு கேட்டால்
2012ம் ஆண்டு சிறுபோக
நெற்செய்கை அழிவுக்கான விபரங்கள்
திரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாக
கூறுகிறார். அதற்குள் ஒரு பெரும்போகம்
நிறைவடைந்து அது அழிவடைந்து மீண்டும்
சிறுபோக
நெற்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆனால்
அனுராதபுரம், பொலநறுவை போன்ற
பிரதேசங்களில் இயற்கை அனர்த்தத்தினால் அழிவடைந்த செற்செய்கைகளுக்கான
நஷ்டஈடு உடனடியாக அந்தந்த அரசாங்க
அதிபர்களாலும், பொறுப்புள்ள
அதிகாரிகளாலும் பெற்றுக்
கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் மாவட்டத்தின் மொத்த செய்கையில்
அரைவாசிக்கும் மேல், அழிவடைந்து மக்கள்
வெறுங்கையுடன் நிற்கும் நிலையிலும் அந்த
மக்களுக்கான நஷ்டஈடு இது வரையில்
பெற்றுக் கொடுக்கப்படவில்லை. எனவே நஷ்டஈடு உடனடியாக வழங்க
வலியுறுத்தி பொருளாதார
அபிவிருத்தி அமைச்சிற்கும் அரச
அதிபருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
இனிமேலா வது மக்களுடைய
துயரங்களை துடப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார
« PREV
NEXT »

No comments