திங்களன்று கைதுசெய்யப்பட்ட சிஹெப் எஸ்ஸெகாயிர், ராயித் ஜேஸ் என்ற இவ்விருவரும் இரானில் உள்ள அல்கைதா சக்திகளிடம் இருந்து உதவிகளைப் பெற்றுவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் மிகப் பெரிய நகரமாகிய டொரொண்டோ அருகே ரயில் ஒன்றை தடம்புரளச் செய்ய இவர்கள் திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த தாக்குதல் கட்டாயம் நடந்திருக்கும் என்று கூறுவதற்கில்லை யென்றாலும், அப்படி நடந்தால் அப்பாவி மக்கள் நிறைய பேர் உயிரிழந்திருப்பார்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
சந்தேக நபர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கண்காணிக்கப்பட்டு வந்த இந்த பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்காவின் சட்ட அமலாக்கப் பிரிவினரும் சம்பந்தப்பட்டிருந்தனர்.
டொரொண்டோ-நியுயார்க் இடையில் ஓடக்கூடிய ஒரு ரயிலை இலக்குவைத்து தாக்குதல் நடந்தவே இவர்கள் திட்டமிட்டார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கவில்லை
No comments
Post a Comment