Latest News

April 12, 2013

பிரித்தானியாவில் இளையோர்களுடன் மோதி தோற்றுப்போன இலங்கை தூதுவராலயம்!
by admin - 0


தமிழீழத் தேசியக் கொடியுடன் வெளிஅரங்கு

பிரித்தானியாவில் லண்டன் மிட்ச்சம் எனும் பகுதியில் வருடா வருடம் பல பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட விளையாட்டு அரங்கு அமைத்து நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழமை.

இந்த வருடம் பல நாட்டுக் கொடிகளுடன் விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டது. கொடிகளைப் பார்த்த இளையோர்கள் தமிழீழத் தேசியக் கொடியையும் அங்கு இடம்பெறச் செய்தனர்.

சில நாட்கள் கடந்த பின்பு பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் இருந்து நிகழ்வு நடத்துபவர்களுக்கு அழைப்பு வந்துள்ளது அதில் பேசியவர்கள் தாம் தூதுவராலயத்தில் இருந்து பேசுவதாகவும் விளையாட்டு அரங்கில் பறக்க விடப்பட்டிருப்பது தீவிரவாதிகளின் கொடி என்றும் அதை அகற்றிவிட்டு சிங்கள கொடியை ஏற்றுமாறும் மிரட்டும் வகையில் பேசுயுள்ளார்கள்.

ஆனால் நேரில் வந்தால் மட்டுமே மேற்கொண்டு பேச முடியும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார்கள்.

அவமானப்பட்ட இலங்கைத் தூதர்கள் உடனே நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு சில காவல்த்துறையினரையும் அழைத்துக்கொண்டுவந்து தமிழீழத் தேசியக் கொடியை இறக்கியதோடு தாம் கையோடு கொண்டுவந்த சிங்கள கொடியை கொடுத்து ஏற்றச் செய்துள்ளார்கள்.

பிரித்தானியா காவல்த்துறையும் இது இலங்கையில் கொடிதான் என உறுதிப்படுத்திய பின்னர் சட்டத்திற்கு இணங்கி சிங்கள கொடியை நிகழ்ச்சியாளர்கள் ஏற்றினார்கள்.


அதன் பின்பு அவ்வழியே சென்ற இளையோர்கள் கொடி மாறியிருப்பதை கண்டதும் உள்ளே சென்று வினவியுள்ளர்கள், நடந்தது இதுதான் என நிகழ்வு ஏற்பாட்டளர்கள் விளக்கி கூறுயுள்ளார்கள்.

அதன் பின்பு இலங்கை பேரினவாதம் பற்றியும் அவர்கள் செய்த இனப்படுகொலைகள் பற்றியும் பிரித்தானியாவில் பரந்து வாழும் தமிழர்கள் நடத்திய போராட்டம் அந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் பறக்கவிடப்பட்ட தமிழீழத் தேசியக் கொடியின் படங்கள் எல்லாம் காட்டி விளக்கிய பின்னர் உடனேயே சிங்கள கொடியை இறக்கியதுடன் திரும்பி தூதர்கள் வந்தால் ஏற்றுவதற்கு கம்பமே இல்லை போ என கூறுவதற்கு வசதியாக கொடி கம்பத்தையும் அகற்றியதோடு தமிழீழத் தேசியக் கொடியை இடம்பெறச் செய்ய முடியாமல்ப் போனதற்கு வருத்தமும் தெரிவித்தார்கள்.

இப்பொழு தாங்களே கொண்டு வந்து ஏற்றிய கொடியை காணாமல் இலங்கை தூதுவராலயம் திகைத்துப்போய் உள்ளதாக செய்தி!


சிங்களக் கொடி அகற்றப்பட்டவுடன்


கம்பம் முளுவதுமாக அகற்றப்பட்டவுடன்

நன்றி http://www.tamizl.com
« PREV
NEXT »

No comments