Latest News

April 18, 2013

வெள்ளைவான்களுக்கு பயந்தே ஊடகவியலாளர்கள் சுயகட்டுப்பாட்டுடன் செய்திகளை எழுதுகின்றனர்; ஜே.வி.பி
by admin - 0

ஊடகவியலாளர்கள் சுயகட்டுப்பாட்டுடன் செய்திகளை எழுதுவதால் நாட்டின் உண்மை நிலை வெளிவருவதில்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. இலங்கையில் ஊடகவியலாளர்கள் சுய கட்டுப்பாட்டின் அடிப்படையில் செய்திகளை எழுதிவருகின்றனர். இதனாலேயே வெள்ளை வான் கடத்தல்களில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். வெள்ளை வான் கடத்தல்கள் நிறுத்தப்பட்டதனால் நாட்டில் ஜனநாயகம் நிலவுகின்றது என தீர்மானம் எடுக்க முடியாது. வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு விடக் கூடாது என்ற பீதியினால் ஊடகவியலாளர்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயற்படுகின்றனர். இதனால் நாட்டின் உண்மை நிலவரம் அம்பலப்படுத்தப்படுவதில்லை. ஜனாதிபதி மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பற்றிய விமர்சனப் பாங்கான தகவல்கள் வெளியிடப்படுவதில்லை. எனவே நாட்டின் உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெளிவுபடுத்த ஜே.வி.பி நடவடிக்கை எடுக்கும் என லால்காந்த மேலும் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments