தடுக்கவே கிளிநொச்சியில்
உதயன்
பத்திரிகை மீது தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்
தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள உதயன்,
சுடர்ஒளி பத்திரிகையின் காரியாலயம் மீதான
தாக்குதலுக்கு கண்டனம்
தெரிவித்து வெளியிட்டுள்ள
அறிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர்
பா.அரியநேத்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சியில் உள்ள உதயன்,
சுடர்ஒளி பத்திரிகை காரியாலயம் மீதான
தாக்குதலுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க
வேண்டும். தொடர்ச்சியாக பல தடவைகள்
உதயன், சுடர்ஒளி நிறுவனத்தின் மீதும் அதன்
ஊழியர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதும்
அதனை தடுக்காததோடு குற்றவாளிகளை கண்
இல்லை. இதன் மூலம்
இலங்கை அரசாங்கமே மேற்படி பத்திரிகை நிறு
மீதான தாக்குதலை ஊக்குவிக்கின்றது. இன்று இலங்கையின் வரலாற்றில் அதிகூடிய
தடவைகள் தாக்குதலுக்கு உள்ளான ஊடக
நிறுவனம் என்றால் அது உதயன்,
சுடர்ஒளி நிறுவனமே ஆகும். கிளிநொச்சியில் உள்ள உதயன்,
சுடர்ஒளி பத்திரிகை காரியாலயம் மீதான
தாக்குதலானது தமிழ் மக்கள் மீது தொடரும்
அடக்குமுறை சம்பந்தமான
உண்மை செய்திகளை தடுப்பதற்காக
மேற்கொள்ளப்பட்டவையாகும். காலம் காலமாக தமிழர்களின் நியாய பூர்வமான
உரிமைக் குரல்களை நசுக்குவதில் சிங்கள
ஆட்சியாளர்கள்
முன்நின்று செயற்பட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின்
உறுப்பினர்களை கொலை செய்வதன்
ஊடாகவும், தமிழ், சிங்கள
ஊடகவியலாளர்களை கொலை செய்வதன்
ஊடாக தமிழர்களை அடக்கியாண்ட அரசாங்கம் இன்று சமாதானம்
நிலவுகின்றது என்று கூறிக்கொண்டு,
மீண்டும் தமிழ் மக்களின்
குரல்களை நசுக்குவதற்காக
அரசாங்கத்தை தாங்கிப்பிடிக்கும்
கட்சி உறுப்பினர்களையும், இராணுவ புலனாய்வாளர்களையும் ஏவிவிட்டு இவ்வாறான
தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றது. இலங்கை அரசாங்கமானது இன்று சர்வதேசத்திற்க
இந்தியாவிற்கு இன்னுமொரு முகத்தையும்
இலங்கையில் உள்ள
தமிழர்களுக்கு வேறொரு முகத்தையும்
காட்டிக்கொண்டு தமிழர்கள் மீதான
அடக்குமுறைகளை தொடர்ந்து கொண்டேயிர என்னைப் பொருத்தமட்டில் தமிழர்களுக்கான
நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை தமிழ் மக்கள்
மீதும், தமிழ் ஊடகங்கள் மீதும் இவ்வாறான
தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டேதான்
இருக்கும். ஆனால் தமிழர்கள் தொடர்ந்தும்
உரிமைகளை பெறும் வரை போராடிக் கொண்டுதான் இருப்பார்கள். இந்த
தாக்குதல்களுக்கெல்லாம் காலம் ஒருநாள் பதில்
சொல்லியேயாகும் என்றார்.
No comments
Post a Comment