
இந்த அறிக்கையில் சிங்கள, தமிழ. புத்தாண்டைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இலங்கையர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகிழ்ச்சியான விடுமுறை மற்றும் வளமான புத்தாண்டுக்கு இனிய வாழ்த்துகளை வழங்குகிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கொண்டாட்டம், புதிய தொடக்கம் குறித்த நம்பிக்கையையும், புதிய வாக்குறுதிகளையும் கொண்டு வருகிறது.
புத்தாண்டு எல்லா இலங்கையர்களும் அமைதி, நல்லிணக்கத்துக்கு இணைந்து பணியாற்ற ஊக்கமளிக்கும் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருகிறது.
நாட்டைப் பிளவுபடுத்தியிருந்த மோதல்களில் இருந்து விடுபட்டு நான்கு ஆண்டுகள் கழித்து, நல்லிணக்கம், பொறுப்புக்கூறலில் முன்னேற்றத்தை அடைவதற்கான பயணத்தில் இலங்கை மக்களுக்கு உதவ, அதிபர் ஒபாமா சார்பிலும், அமெரிக்க மக்களின் சார்பிலும், நான் ஆவலாக இருக்கிறேன்.
இந்த முக்கிய விவகாரங்களை எதிர்கொள்வதற்கு எல்லா இலங்கையர்களுடனும், இலங்கையுடனும் பங்காளராக செயற்பட அமெரிக்கா தயாராக உள்ளது என்று ஜோன் கெரி குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment