Latest News

April 23, 2013

வன்னிப் போரில் கொன்றது போல எல்லாத் தமிழர்களையும் கொல்ல வேண்டும்!- வவுனியா வைத்தியசாலையில் இராணுவச் சிப்பாய் அட்டகாசம்
by admin - 0

வன்னியில் நடைபெற்ற போரில் தமிழர்களை கொன்றது போல எல்லாத் தமிழர்களையும் கொல்ல வேண்டும் என பொது மக்கள் மத்தியில் மிக மோசமாக சிங்கள இனவாதத்தைக் கக்கிய இராணுவச் சிப்பாய் ஒருவர் வைத்தியர் உட்பட மூவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
விடுமுறையிலுள்ள கே.ஆர்.டி.பண்டார (வயது 24) என்ற இச்சிப்பாய் மது போதையில் முச்சக்கர வண்டியை செலுத்திய போது அவரது வாகனம் மகாகச்சகொடி என்ற இடத்தில் விபத்திற்குள்ளாகியது.

இதன்பின்னர் அவர் சிகிச்சைக்காக வவுனியா போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அனுமதிக்கப்பட்ட அவர் மாலை 5.30 மணியளவில் தமிழர்களை மிகக் கேவலமாக சிங்களத்தில் ஏசியவாறு பெண்களின் கழிப்பறைக்குள் செல்ல முயற்சித்துள்ளார்.

அவரைத் தடுப்பதற்கு முயன்ற சிற்றூழியரை அவர் அடித்துக் காயப்படுத்தியதோடு, வைத்தியர் சிங்களவரா? தமிழரா? என்று கேட்டு வைத்தியரையும் மேலும் பலரையும் தாக்கியுள்ளார்.

இத்தாக்குதலில் மூவர் காயமடைந்தனர்.

இதன்போது வன்னியில் தமிழர்களைக் கொன்றது போல எல்லாத் தமிழர்களையும் கொல்ல வேண்டும் என்று என்று கொச்சைத் தமிழிலும் சிங்களத்திலும் கத்தியுள்ளார்.

இதன் பின்னர் இது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கு வந்த இராணுவத்தினர் குறித்த சிப்பாய்க்கு பாதுகாப்பு அளித்து வருவதோடு தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.இது நல்லதொரு எடுத்துகாட்டு
« PREV
NEXT »

No comments