கிளிநொச்சி தொண்டமான்நகர், உதிரவேங்கை வைரவர் ஆலயக்காணி, கரைச்சிப் பிரதேச செயலரின் அனுமதியுடன் பொலநறுவையைச் சேர்ந்த சிங்களவருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.
இக்காணியில் தற்போது எல்லை போட்டு கட்டடம் அமைப்பதற்கான செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கரைச்சிப் பிரதேச சபையினர் தமது அனுமதி பெறப்படவில்லை என்று கூறி நேரிற் சென்று தடுத்த போதிலும் அதனையும் மீறி, அத்து மீறிய செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இக்காணி A-9 வீதியில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ளமையால் காணியின் பெறுமதி 7 கோடி ரூபாவையும் விட அதிகமானதாகும்.
இக்காணியை பொலநறுவையைச் சேர்ந்த சிங்களவருக்கு நாமல் ராஜபக்ச எம்பியும், ஈபிடிபி எம்பியான சந்திரகுமாரும் கரைச்சிப் பிரதேச செயலாளரும் சேர்ந்தே அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாலயக் காணி பற்றி இப்பகுதி மக்கள் எதுவும் பேசக்கூடாது என்று மக்கள் வீடுகளுக்குச் சென்ற புலனாய்வாளர்கள் எச்சரித்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதுடன், இதனால் அச்சமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பல இலட்சம் ரூபாய்களுக்கு ஆசைப்பட்டே மக்களின் காணிகளையும், பொது அமைப்புக்களின் காணிகளையும் அதிகாரிகள் தாரைவார்த்து வருவதாக குற்றம்சாட்டுப்பட்டுள்ளது
No comments
Post a Comment