நடிகைகள் சார்பில் தி.நகரில்
உள்ள தென்னிந்திய நடிகர்
சங்க கட்டிட வளாகத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக
இன்று ஒருநாள் உண்ணாவிரதம் நடந்தது. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்
உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கினார்.
நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி,
துணைத் தலைவர் விஜயகுமார், பொருளாளர்
வாகை சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். இதில் ரஜினி, கமல், சத்யராஜ், அஜீத், விக்ரம்,
சூர்யா, கார்த்திக், ராதிகா, அம்பிகா,
தேவயானி, நமீதா, தன்ஷிகா உட்பட ஏராளமான
நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம்
மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
உண்ணாவிரத முடிவில் நடிகர் சங்கம் சார்பில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடிகர்
சரத்குமார் வாசித்தார்.
1. இலங்கையில் நடந்த இனப்படுகொலையில்
பாதிக்கப்பட்ட நம்
தொப்புள்கொடி உறவுகளுக்கு மறுவாழ்வு
இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த
வேண்டும்
2. இலங்கையில் நடந்த இனப் படுகொலையில்
பங்குள்ள போர்க் குற்றவாளிகளுக்கு உரிய
தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
3. மேற்கூறிய இரண்டும் நடக்கும் வரையில்
இந்திய அரசு இலங்கை மீது பொருளாதார
தடை விதிக்க வேண்டும்.
4. இலங்கை கடற்படையால் இதுவரை 578
தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு உரிய
பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய
அரசை வலியுறுத்துகிறோம்.
5. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக
சட்டசபையில்
பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
6. இலங்கை பிரச்சனை தொடர்பாக
போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள்,
அரசியல் கட்சியினர், தமிழக மக்கள், உலக
தமிழர்கள் ஆகியோரின்
உணர்வுகளை மதித்து இந்த விவகாரத்தில்
மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 7. போனால் திரும்ப வராதது உயிர். போராட
உயிர் தேவை. அதனால் மாணவர்களும்,
இளைஞர்களும் இனி உயிர் தியாகம் செய்யாமல்
அறவழியில் போராட வேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறோம். ஆகிய 7
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஈழத்தமிழர்களுக்கு விடியல் பிறக்க வேண்டும்
என இறைவனை பிரார்த்திக்கிறேன் - நடிகர்
விஜய் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக
தென்னிந்திய நடிகர் - நடிகைகள்
இன்று சென்னையில் ஒரு நாள் அடையாள
உண்ணாவிரதம் இருந்தனர். அனைத்து நடிகர்-
நடிகைகளும் இன்று உண்ணாவிரத
போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில், நடிகர் விஜய்
அவுஸ்திரேலியாவில் படப்பிடிப்பில்
இருப்பதால் உண்ணாவிரத போரட்டத்தில்
பங்கேற்கவில்லை. இதனால் போராட்டம்
குறித்து அவர் கடிதம் ஒன்றை நடிகர்
சங்கத்திற்கு அனுப்பியுள்ளார். ‘’தமிழ் உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனும்
ஈழத்தமிழர்களுக்கு நடந்த
கொடுமைகளை எண்ணி கண்ணீர்
வடித்துக்கொண்டிருக்கின்றனர். அந்த
உணர்வுகளை பயிர் செய்யும் விதத்தில்
கலைஞர்கள் ஒன்று திரண்டு உங்கள் ( சரத்குமார்) தலைமையில் உண்ணாவிரதம்
நடத்துவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். இந்த போராட்டத்தில் நானும்
கலந்து கொள்ள வேண்டும் என்ற
உணர்வு இருந்தாலும், அவுஸ்திரேலியாவின்
படப்பிடிப்பில் இருப்பதால் உண்ணாவிரத
போராட்டத்தில் கலந்து கொள்ள
இயலாதது குறித்து வருத்தமடைகிறேன். ஈழத்தமிழர்களுக்கு விடியல் பிறக்க வேண்டும்
என இறைவனை பிரார்த்திக்கிறேன்’’
என்று அக்கடிதத்தில் விஜய் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment