இறங்கி நிற்கின்ற தமிழக மாணவர்கள் காலத்தின் பதிவாக,
வரலாற்றின் வாசல் கதவுகளாக என்றும் போற்றப்படுவார்கள்.
எமது மக்களுக்காக நாங்கள் நடத்திய போராட்டங்களுக்கு பல
மடங்கு மேலே சென்று நீங்கள் நடத்துகின்ற போராட்டம் எங்களுக்கு பெரும்
கௌரவத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றது. தமிழ் மாணவர்கள் தரணியில் நினைத்ததைச் சாதிப்பார்கள் என்பதை நீங்கள் சாதித்துக்
காட்டி வருகின்றீர்கள். உங்கள் உணர்வுகளுடனே நாங்கள்
இங்கே இணைந்திருக்கின்றோம் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்
தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொழுந்துவிட்டு எரிகின்ற ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக
மாணவர்களுக்கு ஆதரவாக நாங்கள் தாயகத்தில் எதையுமே செய்ய முடியாமல் சிங்களப் படைகளின் சிறைகளுக்குள் வாழ்கின்றோம். அது குறித்து நாங்கள் பெரும்
கவலைகளை அடைந்திருக்கின்றோம். தினமும் தமிழக மாணவர்களின் உணர்வுகளைச்
சுமந்தவர்களாய் வாழ்ந்து வருகின்றோம். எங்கள் இக்கட்டான நிலைமையை தமிழக
சகோதரர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகின்றோம் என்றும் யாழ்.
பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
தமிழக மாணவர்களின் போராட்டம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவியான அ.அஞ்சலினா(வயது-23) என்ற மாணவி சங்கதி24
இற்கு கருத்து தெரிவிக்கையில், தமிழகத்தில்
இப்படியொரு புரட்சி வெடிக்குமென்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உண்மையில்
திலீபன் அண்ணா கூறிய தீர்க்க தரிசனம் இன்றுதான் நிறைவேறியிருக்கின்றது. நாம்
எமது இலட்சியத்தை வென்றெடுக்க வேண்டுமாயின் மக்கள் புரட்சி வெடிக்க
வேண்டும். அத்தகையதொரு புரட்சியின் மூலமாகவே தமிழ் மக்கள் விடுதலை அடைய முடியுமென்று 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்.
கோட்டைக்கு அண்மையிலுள்ள முற்றவெளி திடலில் இடம்பெற்ற உரையொன்றில்
திலீபன் அண்ணா தெரிவித்திருந்தார். ஈழத் தமிழர்களிடையே வெடிக்க இருந்த மக்கள் புரட்சி அடக்கியொடுக்கப்பட்ட
நிலையில் இன்று அது தமிழகத்தில் வெடித்திருக்கின்றது. இந்தப் புரட்சியின்
மூலம் எமக்கு ஒரு தீர்வு கிடைத்தால் சரி. இல்லாவிடின் தீர்வு கிடைக்க
வாய்ப்பேயில்லை. இத்தனை பெரிய புரட்சியை நாம் அடக்கிவிட்டோம் என்று மத்திய
அரசும், இத்தனை பாடுபட்டு இவர்கள் என்ன செய்தார்கள் என்று சிங்கள அரசம் கர்வம்
கொள்ளும். இந்தக் கர்வம் மேலும் தமிழின அழிப்பிற்கே வழிகோலும். எனவே, தமிழக மாணவர்களால் மிகவும் வித்தியாசமான முறையில் ஒழுங்காகவும்
நேர்த்தியாகவும் கட்டமைக்கப்பட்டு நிறைந்த அரசியல் ஞானத்துடன்
முன்னெடுக்கப்படுகின்ற இந்தப் போராட்டம் வெற்றிபெறும் என்ற
நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என்றார். யாழ். பல்கலைக்கழக மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் ச.கார்த்திகேயன்(வயது-23)
என்ற மாணவன் சங்கதி24 செய்திப்பிரிவிற்கு கருத்து தெரிவிக்கையில், சிங்களப்
படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய, விளங்குகின்ற எங்கள் அண்ணன்
பிரபாகரனின் காலத்தில் தமிழீழத்தை வென்றெடுப்பதற்காக நாங்கள் போராடினோம்.
ஆனால், எமது போராட்டத்தை இங்கே சிறிலங்கா அரசாங்கம்
திட்டமிட்டு சிதைத்துவிட்டது. நாங்கள் உடல் தளர்ந்தோம். ஆனால், எங்கள் உணர்வுகள் தளரவில்லை. இலட்சிய உறுதி தளம்பவில்லை. என்றாவது ஒருநாள்
நாங்கள் தமிழீழம் என்ற இலட்சியத்தை வென்றெடுப்போம் என்ற உறுதியுடன்
வாழந்தோம். இந்த நிலையில் இந்தியாவில் தமிழக மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும்
ஈழத் தமிழர்களுக்காக களமிறங்கி பெரும் புரட்சியொன்றை ஏற்படுத்தியுள்ளனர்.
இவர்களின் வீரதீரச் செயல்கள் எங்களை மெய் சிலிர்க்க வைக்கின்றது. இவர்கள் எங்கள்
காவல் தெய்வங்களாக மாறியிருக்கின்றார்கள். இவர்களுக்கு ஆதரவாக நாங்கள்
எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியவில்லை. எனவே, புலம்பெயர்
நாடுகளிலுள்ள எமது உறவுகள் தத்தமது நாடுகளில் தமிழக மாணவர்களுக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுத்து கரம் கோர்க்க
வேண்டும். தமிழர்களின் வீரம், ஒற்றுமை என்பன உலகெங்கும் பறைசாற்றப்பட
வேண்டும்.
நாங்கள் யாருக்கும் அடிமைப்பட்ட இனம் இல்லையென்பதையும் நாங்கள்
கைவிடப்பட்டவர்கள் இல்லையென்பதையும் எமக்காக குரல்கொடுக்க தாங்கள்
இருக்கிறார்கள் என்பதையும் தமிழக மாணவர்கள் செயலில் காட்டியிருக்கின்றனர். இத்தனை நாட்களாகத் தொடர்கின்ற இந்தப் போராட்டம்
திடீரென்று தீர்வின்றி முடிவடையக்கூடாது. இதுவே எங்களின் எதிர்பார்ப்பு என்றார். யாழ். பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவனான து.கணாதீபன் (வயது-25) என்ற
மாணவன் தமிழக மாணவர் போராட்டம் தொடர்பாக சங்கதி24
இற்கு தனது கருத்தை தெரிவிக்கையில், தமிழக மாணவர்களின் போராட்டத்தால்
சிங்கள அரசு கதிகலங்கி நிற்கின்றது. ஈழத்தில் கடந்த முப்பது வருட காலமாக
நடைபெற்ற போராட்டத்தின்போது கூட கலங்காத அளவிற்கு தமிழக மாணவர்களின்
போராட்டம் சிங்கள அரசாங்கத்தை பெருமளவில் பாதித்துள்ளது. ஏழு கோடி வரையான மக்களைக் கொண்ட தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த
மாணவர்களின் என்ணிக்கையானது சிறிலங்காவின் ஒட்டுமொத்த
சனத்தொகையை விட அதிகமானதாகும். இதனால், மாணவர்களின் போராட்டங்கள்
மேலும் வலுப்பெறுமானால் தங்களுக்கு பெரும்
நெருக்கடி நிலை ஏற்படுமென்று மகிந்த அரசாங்கம் நிலை தடுமாறிப்போயுள்ளது. தென்னிந்தியாவில் மணவர்கள் முன்னெடுக்கின்ற ஜனநாயகப் போராட்டங்கள்
முற்றுப்பெறாதா என்ற ஏக்கமே தென்னிலங்கையில்
ஏற்பட்டுள்ளதென்று எமக்கு கற்பிக்கின்ற தென்னிலங்கைப் பேராசிரியரொருவர்
தெரிவித்தார். இந்த நிலையிலேயே இன்று சிங்கள அரசாங்கம்
தவித்துக்கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களை திட்டமிட்டு அழித்தொழிக்கின்ற
நிலைப்பாட்டையே சிறிலங்கா அரசாங்கம் கடைப்பிடிக்கின்றது. தனது இந்த நிலைப்பாட்டை மாற்றுவதற்கு சிங்களவர்கள் தாயாராக இல்லை. ஏனெனில்,
இங்கே தமிழ் மக்களை அழித்தொழித்துவிட்டால் சிறிலங்காவை தனிச் சிங்கள நாடாக
மாற்றலாம் என்றே சிங்களம் கனவு காண்கின்றது. இந்த நிலை ஏற்பட தமிழக
மாணவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். நாங்கள் தமிழக மாணவர்களுடன்
இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள
போதிலும், இன்று வரை தமிழக மாணவர்களின் உணர்வுகளுடனேயே இருக்கின்றோம் என்றார். யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள பல மாணவர்கள் தங்கள் கருத்துக்களை எமது சங்கதியின்
யாழ். செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தியுள்னர். தாங்கள் அனைவருமே சந்தப்பம்
கிடைக்கின்ற போது சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரா வீதிகளில்
இறங்கி போராடத் தயாராகவே உள்ளதாகவும் யாழ்;. பல்கலைக்கழக மாணவர்கள்
தெரிவித்துள்ளனர்.(பாதுகாப்பு காரணங்களுக்காக மாணவர்கின் பெயர்கள் மட்டும்
மாற்றப்பட்டுள்ளன, பால், வயது, ஏனையவை சரியானவை)
No comments
Post a Comment