Latest News

March 20, 2013

உலகமே வியக்கும் மாணவர் எழுச்சி
by admin - 0

தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு உட்பட எட்டு அம்சக்
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள்வெடித்துள்ள
நிலையில், தமிழக மாணவர்களின் போராட்டத்தை சாதாரணமான விடயமாக கருதிவிட
முடியாது என்றும், மாணவர் போராட்டம் குறித்து அமெரிக்கா மிகவும் கவனமாக
அவதானித்துக் கொண்டிருக்கின்றது என்றும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கான
அமெரிக்காவின் தூதுவர் எலின் சம்பர்லைன் டொனஹே தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அரங்கம் ஒன்றில் வைத்து கருத்து வெளியிட்ட அவர், தமிழக மாணவர்களின் இந்தப் போராட்டத்தை சாதாரணமான ஒரு விடயமாக
கருதி விடமுடியாது என்று கூறினார். 'தமிழகத்தில் கோடிக்கணக்கில் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து நடத்தும் ஒரு போராட்டத்தை இலேசான விடயமாக
கருதிவிட முடியாது. அது அமெரிக்கா இங்கு கொண்டுவரவுள்ள சிறீலங்கா தொடர்பான தீர்மானத்தில்
தாக்கங்களை ஏற்படுத்தலாமென நான் கருதுகிறேன்' - என்றும் டொனஹே அம்மையார் தெரிவித்துள்ளார். அதேவேளை, இலங்கை விடயம் குறித்தான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படுமா, இல்லையா என்ற
கேள்வி நிலவிவரும் இவ்வேளையில், இதுகுறித்து இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்றும்
அவர் தெரிவித்துள்ளார். தமிழக மாணவர்களின் போராட்டம் குறித்து சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம்
கொடுத்து செய்திவெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.





« PREV
NEXT »

No comments