Latest News

March 22, 2013

தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு - அறிவிப்பு
by admin - 0

==================================

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஓன்று திரட்டி , தமிழீழ பிரச்சினை உள்பட இனிவரும் அனைத்து வகையான சமுதாய பிரச்சினைகளுக்கும் தமிழக மாணவர்கள் தங்கள் கையில் எடுத்து போராடுவார்கள்.. போராடுவோம்... இதை கருத்தில் கொண்டு தான் - " தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு " என்ற மாபெரும் அமைப்பு இன்று உருவாக்க பட்டுள்ளது... கட்சி வேறுபாடு இல்லாமல் , சாதி மதம் அப்பாற்பட்டு - தமிழின உணர்வு மட்டுமே உள்ள அனைத்து மாணவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்...

வருகிற மார்ச் 31 -க்குள் தமிழக மாணவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றா விடில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து தமிழ் மாணவர்களையும் ஓன்று திரட்டி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகை இடுவோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்... கட்சி வேறுபாடு இல்லாமல் , சாதி மதம் அப்பாற்பட்டு - தமிழின உணர்வு மட்டுமே உள்ள அனைத்து மாணவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்...

தமது இரத்த சொந்தங்களுக்காக , அவர்களின் இனபடுகொலைக்கு நியாயம் கேட்பதற்காக அறவழியில் போராடிய தமிழக மாணவர்களை - "தமிழ் பொறுக்கிகள் " என்று கொச்சை படுத்திய சி . சுப்ரமணிய சுவாமியை மிக கடுமையாக , வன்மையாக கண்டிக்கிறோம்... அவர் மன்னிப்பு கேட்காவிடில் , அவர் தமிழகம் வரும்போது அவருக்கு எதிராக மிக பெரிய போராட்டம் மற்றும் கருப்பு கொடி ஆர்பாட்டம் நடத்த படும்....

ஆசிய விளையாட்டு போட்டியில் சிங்கள விளையாட்டு வீரர்கள் இடம்பெறுவதால் அந்த போட்டி தமிழகத்தில் நடை பெறாது என்று தமிழக அரசு அறிவித்தது,

அதேபோல - சிங்கள விளையாட்டு வீரர்கள் வருகிற IPL -2013, T20 விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியாவில் எங்கு பங்கு கொண்டாலும் அவர்களுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்பாட்டங்களும் , கருப்பு கொடி போராட்டங்களும் கட்டாயம் நடைபெறும்.

« PREV
NEXT »

No comments