Latest News

March 19, 2013

தமிழ் நாட்டின் செய்திகளை யாழ்.மக்களை பார்வையிடுவதற்கு தடை விதிப்பு
by admin - 0

தமிழ் நாட்டில்
தீவிரமடைந்து வரும்
மாணவர்களின்
போராட்டங்களைத்
தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் இந்திய
தொலைக்காட்சிகள் சிலவற்றின் செய்திகள்
இலங்கை இராணுவத்தினால்
தடுக்கப்படுகின்றன. குறிப்பாக நேற்று காலை, மதியம்,
மாலை ஆகிய நேரங்களில் செய்தி நேரங்களில்
குறித்த அலைவரிசைகள் முற்றாக செயலிழக்கச்
செய்யப்பட்டுள்ளன. அதேவேளை செய்தி நேரங்கள் முடிந்ததும்
குறித்த அலைவரிசைகள் மீண்டும் ஒளிபரப்புச்
செய்யப்படுகின்றன. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக
மேற்கொள்ளப்படும் தீர்மானங்களைத்
தொடர்ந்து தமிழ் நாட்டில்
கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரவ
ஆரம்பித்துள்ள போராட்டங்கள்
யாழ்ப்பாணத்திற்குள்ளே நுழையக் கூடாது என்பதற்காகவே இந்நடவடிக்கைகளில்
இராணுவப் புலனாய்வாளர்கள்
ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

தடை செய்யப்பட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சியை விவசாயி இணையத்தில் பார்வையிடுங்கள்

« PREV
NEXT »

No comments