Latest News

February 07, 2013

குடாநாட்டில் பத்திரிகைகள் மீது தொடரும் வன்முறை ! தப்பியது உதயன் - சிக்கியது தினக்குரல்!!
by admin - 0

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை பத்திரிகை விநியோகப் பணியை முடக்கும் நோக்குடன் மீண்டும் ஒரு அராஜகம் அரங்கேறியிருக்கின்றது. தினக்குரல் பத்திரிகையின் விநியோகப் பணியாளர் தாக்கப்பட்டு பத்திரிகைகள் அவரது மோட்டார் சைக்கிளோடு வைத்து நடுவீதியில் எரியூட்டப்பட்டிருக்கின்றது.

யாழ். பருத்தித்துறை விநியோக மார்க்கத்தில் புத்தூர் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது :

வழமைபோல குடாநாட்டிலுள்ள பத்திரிகைகள் விநியோகப் பணிகளுக்கான பணியாளர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சமயம் கோப்பாய் பகுதியில் வைத்து உதயன் பத்திரிகையின் விநியோகப் பணியாளரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் மறித்த போது நிற்காமல் ஓடிச் சென்ற வேளையில் தினக்குரல் பத்திரிகையின் பணியாளர் புத்தூர் பகுதியில் வழிமறிக்கப்பட்டு மோட்டார் சைக்கிளுடன் பத்திரிகைகள் தீயிடப்பட்டிருக்கின்றது. மோட்டார் சைக்கிளோடு அவர் வைத்திருந்த பத்திரிகைகள் அனைத்தும் எரிந்து சாம்பராகியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

« PREV
NEXT »

No comments