பரபரப்பை ஏற்படுத்திய மாயன் கலண்டர்
தினத்துக்கு மாயா இனத்து மக்கள் பாரம்பரிய
கொண்டாட்டங்களுடன் விடைகொடுத்தனர்.
மெக்சிகோவின் யுகடான் பகுதியில் வாழும்
மாயா இனத்தவர்கள் நேற்று காலை முதல் பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகளுக்காக
தம்மை தயார்படுத்தி வந்தனர். மாயன் கலண்டரின்
இறுதி நாளுக்கு விடைகொடுக்கும் முகமாக
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் புதிய
யுகம் ஆரம்பமாகுவதாகக் குறிப்பிட்டு பாரம்பரிய
வாழ்த்துப் பாடல்களையும் பாடி மகிழ்ந்தனர்.
அவர்களுடைய கணிப்பின்படி இன்றுடன் 400 வருடகால யுகம் நிறைவுக்கு வருகிறது.
No comments
Post a Comment