Latest News

December 20, 2012

பிரதம நீதியரசரின் மேல்முறையீட்டு மனு பரிசீலணைக்கு
by admin - 0

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கைக்கு எதிராக பிரதம நீதியரசர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு நாளை பரிசீலனை செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற விசாரணையினை நீக்குமாறு கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் பிரதம நீதியரசர் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அதனை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரும், நீதவானுமான எஸ்.சிறிஸ்கந்தராஜா தலைமையிலான மூவர் அடங்கிய நீதவான்கள் குழு இந்த மனுவை பரிசீலனை செய்ய உள்ளது.

அதன்படி நீதவான் சுனில் குணரட்ன மற்றும் ஏ.டபிள்யூ.ஏ. சலாம் ஆகியோர் இந்த நீதவான்கள் குழுவில் ஏனைய உறுப்பினர்களாவர். இதில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கையை தள்ளுபடி செய்யுமாறு கோரியதுடன் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் நீதியான முறையில் நடத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதனை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க கோரியுள்ளார்.



இதன்படி மனுவில் சபாநாயகர், பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள், பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் நாயகம் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இணைப்பு
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையினை நிறுத்துமாறு கோரி மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அத்துடன் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி அனுர பிரியதர்சன யாபா தலைமையிலான பதினொருவர் கொண்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு, பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் விசாரணை
நடத்தினர்.

அதன'போது தன்னை தகாதவார்த்தைகளில் திட்டினர் எனவும் பிரதம நீதியரசர் குற்றம் சாட்டியிருந்தார். எனினும் பிரதம நீதியரசருக்கு எதிராக சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுக்களில் மூன்று குற்றச்சாட்டுக்கள் சரியானவை என பாராளுமன்றத் தெரிவுக்குழு அறிவித்திருந்தது.

எனினும் இந்த விசாரணை அறிக்கைகளுக்கு அப்பால் அவர் மேல் நீதிமன்றில் வழக்குத்
தாக்கல் செய்துள்ளார்.

« PREV
NEXT »

No comments