கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளரும்
பேராசிரியருமான புஷ்பரெட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அலுவலகத்திற்கே இவர்கள் மூவரையும் விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு புலனாய்வு பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்ட மாணவிகளில் இருவர் வவுனியாவைச் சேர்ந்தவர்களென
தெரிவிக்கப்படுகிறது. மற்றையவர் யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதியின் தலைவியும் எனவும் தெரிவிக்கப்பட்டுளளது. இதேவேளை, அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கென
அழைத்துச் செல்லபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment