Latest News

November 27, 2012

வவுனியாவில் பண்டாரவன்னியன் சிலைக்கு முன்னால் மாவீரர் சுடர் ஏற்றல் !
by admin - 0

வவுனியாவில் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுச்சிலைக்கு முன்னால்
இன்று மாவீரர்களை நினைவிற்கொண்டு சுடர்ஏற்றப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் காணப்படும் ஒரேயொரு துயிலுமில்லமான ஈச்சங்குளம் மாவீரர்
துயிலுமில்லத்திற்கு இன்று மாலை விளக்கேற்றச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின்
பதில் தலைவர் எம்.எம்.ரதன் ஆயுததாரிகளால் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
ஈச்சங்குளம் பாடசாலைக்கு அருகாமையில் வைத்து சிவிலுடை தரித்த இரண்டு ஆயுததாரிகளால்
மிரட்டப்பட்டுள்ளார். அத்துடன் விளக்கேற்ற கொண்டு சென்ற பொருட்களையும் ஆயுததாரிகள் பறித்து சென்றதாக
கூறப்படுகிறது. ஆயினும் மண்ணின் விடுதலைக்காக போராடி வீழ்ந்த மாவீரர்களுக்கு அஞ்சலி வணக்கம் செலுத்தும் முகமாக
வவுனியா கச்சேரி வளாகத்துள் அமைந்துள்ள மாவீரன் பண்டார வன்னியன் உருவச் சிலையிலும்
நகரசபைக்கு முன்பாகவுள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபியிலும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.
ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம் இடித்தழிக்கப்பட்டு 611 படைப்பிரிவு முகாம் அமைத்துள்ளார்கள் கிளறப்பட்ட
கல்லறைகள் அனைத்தும் அருகிலுள்ள தனியார் காணி ஒன்றில் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும் மண்ணின் விடுதலைக்காக போராடி வீழ்ந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வவுனியா கச்சேரி வளாகத்துள் அமைந்துள்ள மாவீரன் பண்டார வன்னியன் உருவச் சிலையிலும்
நகரசபைக்கு முன்பாகவுள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபியிலும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.
« PREV
NEXT »

No comments