மாணவர் ஒன்றியத்தின்
முன்னாள் அழைப்பாளர் உதுல்
பிரேமரட்ன
கைது செய்யப்பட்டுள்ளார். மோதல் சம்பவமொன்றுடன் தொடர்புடைய
குற்றச்சாட்டின் பேரில் உதுல் பிரேமரட்ன
நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ஜே.வி.பி. கட்சி உறுப்பினர்களும்,
முன்னணி சோசலிச
கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட
மோதல் சம்பவமொன்றுடன் தொடர்புடைய
குற்றச்சாட்டின் பேரில் பொரளை பொலிஸார்
உதுல் பிரேமரட்னவை கைது செய்துள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உந்துல்
பிரேமரட்னவும் காயமடைந்துள்ளதாக
முன்னணி சோசலிச கட்சித் தகவல்கள்
தெரிவிக்கின்றன. உதுல் பிரேமரட்ன பிணையில் விடுதலை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்
ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் உதுல்
பிரேமரட்ன சரீரப் பிணையில்
விடுதலை செய்யப்பட்டுள்ளார். பொரலஸ்கமுவை பகுதியில் இடம்பெற்ற
மோதல் சம்பத்தை அடுத்து நேற்று இவர்
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், நுகேகொட நீதவான்
நீதிமன்றத்தினால் இன்று பிணையில்
விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
No comments
Post a Comment