Latest News

October 24, 2012

நிலநடுக்கத்தினால் இலங்கையில் அதிகளவு பாதிப்புகள் ஏற்படக்கூடும்
by admin - 0

எதிர்காலத்தில் இலங்கையிலும் நிலநடுக்கம்
ஏற்ப்படலாம் என நிலநடுக்கத்
தாக்கத்தில்
இருந்து பாதுகாக்கக் கூடிய கட்டடங்களை வடிவமைப்பதற்கான
வழிகாட்டு உபகுழுவின் தலைவர்
சகபந்து தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தின் பாதிப்புகளில் இருந்து
இலங்கை இனிமேலும் நீண்ட காலத்துக்குத்
தப்பிக் கொள்ள முடியாது. இலங்கையின் தென்மேற்கு கரைக்கு அப்பால்
500 - 700 கி.மீ தொலைவில், இந்தோ -
அவுஸ்ரேலிய புவித்தட்டில்
பிளவு ஏற்பட்டுள்ளதாக அண்மைய புவியியல்
ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், புதிய புதிய
தட்டு ஒன்று உருவாகி வருகிறது. இதன்
காரணமாக, எதிர்காலத்தில் நிலநடுக்கத்தினால்
இலங்கையில் அதிகளவு பாதிப்புகள்
ஏற்படக்கூடும். என அவர்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.. ஆவணப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில், இலங்கையில் 1615ம்
ஆண்டு பாரிய நிலநடுக்கம்
ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில்,
ஆயிரக்கணக்கான பொதுமக்கள்
கொல்லப்பட்டனர். அண்மைக்காலத்தில்
எமது பிராந்தியத்தியத்திலும் பல நில
அதிர்வுகளை உணர்ந்துள்ளோம். ஆனால்
பாரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில் கொழும்பு போன்ற
நகர மையத்தின் அருகே நிலநடுக்கம்
நிகழுமானால், தற்போதைய
அபிவிருத்தி மற்றும் சனத்தொகையின்
காரணமாக பாரிய அழிவுகள் ஏற்படும்.” என
அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் அனர்த்த முகாமைத்துவ
அமைச்சில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில்
கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்
இவ் எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
« PREV
NEXT »

No comments